பீகார் முதல்வரை சந்தித்த டி.ஆர் பாலு… வடமாநில தொழிலாளர்கள் பற்றிய வதந்தி குறித்து விளக்கம்!!
தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரவிய நிலையில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரை மக்களவை திமுக குழு தலைவர் டி.ஆர் பாலு, பாட்னாவில் சந்தித்து பேசியுள்ளார்.
தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரவிய நிலையில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரை மக்களவை திமுக குழு தலைவர் டி.ஆர் பாலு, பாட்னாவில் சந்தித்து பேசியுள்ளார். தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோவை கண்ட வட மாநிலத்தவர்கள் அச்சத்தில் ஆழ்ந்தனர். இதை அடுத்து இணையத்தில் பரப்பப்படும் வீடியோ உண்மையில்லை என்றும் இதுகுறித்து வட மாநில தொழிலாளர்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் தமிழக காவல்துறை அறிவுறுத்தியது. இந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் பீகாரை சேர்ந்த அரசு அதிகாரிகள் குழு தமிழகத்திற்கு வந்து கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பணியாற்றி வரும் வடமாநில தொழிலாளர்களை சந்தித்து விளக்கம் கேட்டது.
இதையும் படிங்க: ஈரோடு வெற்றியை திசைதிருப்பவே வட மாநிலத்தவர் குறித்து வதந்தி பரப்புகின்றனர்... துரைமுருகன் குற்றச்சாட்டு!!
மேலும் புலம்பெயர் தொழிலாளர்களைச் சந்தித்து தமிழக அரசு அதிகாரிகளும் உங்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று உறுதியளிக்கின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் புலம்பெயர் தொழிலாளர்களைச் சந்தித்துப் பேசினார். இதற்கிடையில் பீகார் முதல்வர் நிதிஷ் குமாரைத் தொடர்பு கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூகவலைதளங்களில் பரப்பப்படும் வதந்தியை தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று உறுதியளித்திருந்தார்.
இதையும் படிங்க: நான் தோசை இட்லி சட வரவில்லை! ஜெயலலிதா போல தலைவராக வந்தேன்! அண்ணாமலை பேச்சு
இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தல்படி பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரை மக்களவை திமுக குழு தலைவர் டி.ஆர் பாலு, பாட்னாவில் சந்தித்து பேசினார். அப்போது, தமிழ்நாட்டில் வேலை பார்க்கும் பீகார் மாநில தொழிலாளர்களைப் பாதுகாக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தார். புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பான வதந்தியை கட்டுப்படுத்த எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் டிஆர்.பாலு விளக்கமளித்தார். அதைத்தொடர்ந்து பீகார் முன்னாள் முதலமைச்சரும், லாலு பிரசாத் யாதவின் மனைவியுமான ராப்ரி தேவியை டி.ஆர் பாலு சந்தித்து புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று உறுதியளித்தார்.