Asianet News TamilAsianet News Tamil

பெண்களின் தாலியை அறுக்கவே ஆயிரம் ரூபாய் - கொட்டும் மழையில் காளியம்மாள் உணர்ச்சி பொங்க பேச்சு

நாட்டிலேயே மனித குலத்திற்கு மிகவும் ஆபத்தான கட்சியாக பாஜக உள்ளதாக நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் குற்றம் சாட்டி உள்ளார்.

Naam tamilar katchi person kaliammal slams dmk government in dharmapuri
Author
First Published Jul 11, 2023, 2:24 PM IST

தர்மபுரி மாவட்டம் அரூரில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் குடிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி  பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள், அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு குடும்பத் தலைவிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படும் என்ற செய்தி பெண்களிடையே வானத்தில் பறப்பது போல் உள்ளது. ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு கூடவே அவர்களுடைய தாலியையும் அறுக்க நினைக்கும் திராவிட மாடல் ஆட்சி செயல்படுத்த தயாராக உள்ளது.

படிக்கும் மாணவர்கள் பையில் கஞ்சா எடுத்து செல்வதற்கும், கஞ்சா பழக்கத்திற்கு ஆளாகுவதற்கும் தற்போது தமிழகத்தில் ஆட்சி செய்யும் திமுக அரசே கஞ்சா விற்பனை செய்கிறது. கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்பதே இன்னும் தெரியவில்லை. ஒரு முறையாவது அவர் முகத்தை காட்ட வேண்டும். அல்லது  இரண்டு இட்லி சாப்பிடுகிறார் என்ற செய்தியாவது சொல்ல வேண்டும்.

பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வாங்கிய ஊழியர்; முறையிட்ட குடிமகனை கும்மி எடுத்த காவல் அதிகாரி

தற்போது தமிழகத்தில் ஆட்சி செய்து வரும் திராவிட மாடல் ஆட்சியின் அவலங்கள் ஏராளம். அதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருக்கக்கூடிய சேகர்பாபு, உயிரோடு இருக்கக்கூடிய தமிழக முதல்வர் ஸ்டாலின் உருவப்படத்திற்கு சூடம் ஏற்றுகிறார். பொதுவாக இறந்தவர்களுக்கு தான் இவ்வாறு செய்வது வழக்கம். முதல்வர் செத்து விட்டால் அந்தப் பொறுப்பில் நாம் அமர்ந்து கொள்ளலாம் என்று அவ்வாறு செய்தாரா என்று தெரியவில்லை.

கடந்த அதிமுக ஆட்சியில் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி, நெடுஞ்சாலை துறையில் மட்டும் 4,800 கோடி ரூபாய் கொள்ளை அடித்து எட்டு தலைமுறைகளுக்கு சொத்து சேர்த்துள்ளார். தற்போது தமிழகத்தில் அதிர்ச்சி தரக்கூடிய வகையில் தக்காளி விலை உயர்ந்து கொண்டிருக்கிறது. அதற்கு காரணம் வெளி மாநிலங்களில் இறக்குமதி குறைவாக உள்ளது. அதனால் இந்த விலைவாசி அதிகரித்து உள்ளதாகவும், தமிழக அரசு கூறியுள்ளது. 

அரசுப்பள்ளி மாணவர்களை சித்தாளாக பயன்படுத்தி கட்டிட வேலைக்கு ஈடுபடுத்திய தலைமை ஆசிரியர்

100 நாள் வேலைத்திட்டம் என்ற பெயரில் பெண்களை கதை பேச வைத்துள்ளனர். ஒரு குளத்தை வெட்டுவதற்கு 18 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த குளத்தை பார்ப்பதற்கு வடிவேல் செய்யும் காமெடி போல் குளத்தைப் பார்க்கச் சென்றால் அங்கு குளம் இல்லை. தற்போது காலை உணவு திட்டம் என்ற பெயரில் ரேஷன் கடையில் போடும் அரிசியை சமைக்கின்றனர். இந்தியாவில் அரை மணி நேரத்திற்கு ஒரு பெண் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிறார். 

திமுக கூட்டத்திற்கு செல்லும் மகளிர் காவலர்கள் திமுக தொண்டர்கள் மூலம் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகி வருகின்றனர். மனித குலத்திற்கு மிகவும் ஆபத்தான கட்சி ஒன்று இருக்கிறது என்று சொன்னால் அது இந்தியாவில் உள்ள பாரதிய ஜனதா கட்சி தான் என்றார்.

Follow Us:
Download App:
  • android
  • ios