வெயில் அதிகமா இருக்கு.. என்ன சன்ஸ்க்ரீன் யூஸ் பண்றீங்க ? யோசிக்காம பதில் சொன்ன ராகுல் காந்தி!
இந்திய ஒற்றுமை யாத்திரையின் மூலம் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.
இந்திய ஒற்றுமை யாத்திரை
காங்கிரஸ் கட்சியை புத்துயிர் பெற செய்யும் நோக்கத்துடனும், மத்திய பாஜக ஆட்சியை 2024 தேர்தலில் முடிவுக்கு கொண்டுவரும் எண்ணத்துடன் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை யாத்திரை என்ரு பேரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.
இதையும் படிங்க..பாலியல் தொழிலில் இலங்கை பெண்கள்.. ஸ்லீப்பர் செல்ஸ் ஊடுருவல்! உளவுத்துறை தந்த ரிப்போர்ட் - பரபரப்பு
ராகுல் காந்தி
இப்போது அவர் கர்நாடகாவில் பாத யாத்திரை சென்று வருகிறார். காங்கிரஸ் வலுவாக இருக்கும் மாநிலங்களில் கர்நாடகாவும் ஒன்று என்பதாலும் சில மாதங்களில் அங்குத் தேர்தல் நடைபெற உள்ளதாகவும் பல்வேறு இடங்களில் பாத யாத்திரை சென்று ராகுல் காந்தி பொதுமக்களைச் சந்தித்து வருகிறார். நேற்று ராகுல் காந்தி கர்நாடகா காங்கிரஸ் தொண்டர்கள் உடன் உரையாடினார்.
தொண்டர்களுடன் உரையாடல்
அது தொடர்பான வீடியோவை காங்கிரஸ் தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு உள்ளது. அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில், ராகுல் காந்தி தொண்டர்களிடம் நலம் விசாரிக்கிறார். பிறகு தொண்டர் ஒருவர், நீங்கள் நீண்ட நேரம் நடக்கும்போது சில சிக்கல்கள் ஏற்படும். கால்களில் கொப்புளங்கள் ஏற்படுமே ? என்று கேட்க, அதற்கு பதிலளித்த எல்லோருக்கும் கொப்புளங்கள் வந்துள்ளதா என்று கேட்டார். பிறகு எனக்கு எந்த கொப்பளங்களும் வரவில்லை என்றார்.
இதையும் படிங்க..‘டிசம்பர் 4’ ஜெயலலிதாவுக்கு திதி கொடுத்த தீபக்.. ஆறுமுகசாமி ஆணையம் கிளப்பிய புது சர்ச்சை
எந்த சன்ஸ்கிரீன் ?
தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, மதிய நேரத்தில் வரும் அதிக வெப்பம் நடப்பது உடலுக்கு நல்லதல்ல. இதைக் கருத்தில் கொண்டே ஒரு நாளைக்கு அதிகபட்சம் 20 கிமீ நடக்கலாம் என்று திட்டமிட்டு உள்ளோம் என்று பதில் அளித்தார்.
அடுத்து பேசிய தொண்டர் ஒருவர், நீங்கள் எந்த சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துகிறீர்கள் ? என்று கேட்கிறார். அதற்கு பதில் அளித்த ராகுல், நான் சன்ஸ்கிரீன் எதுவும் பயன்படுத்துவதில்லை. சில சன்ஸ்கிரீன்களை அம்மா அனுப்பினார். ஆனால், நான் எதையும் பயன்படுத்தவில்லை என்று பதில் அளித்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க..நிமிடத்துக்கு நிமிடம் அப்டேட்.. எடப்பாடி சொன்னது பொய்.! தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் திருப்பம்