முரசொலி நில விவகாரம் தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. 

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் அசுரன் திரைப்படம் வெளியாகியது. இந்த திரைப்படத்தின் கதை பஞ்சமி நிலம் தொடர்பாக எடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், திரைப்படத்தை பார்த்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இது படம் அல்ல பாடம் என்று தனது டுவிட்டர் பக்கத்தில், திரைப்படம் குறித்து பதிவிட்டிருந்தார். 

இதையும் படிங்க;- மணிப்பூர் MLA வழக்கில் அதிரடி.. பல்லு பிடிங்கிய பாம்பாக மாறிய சபாநாயகர். ஓபிஎஸ்க்கு அதிர்ச்சி கொடுத்த தீர்ப்பு

இந்நிலையில், பஞ்சமி நிலத்தில் முரசொலி அலுவலகம் அமைந்திருப்பதாகவும், அந்த இடத்தின் மூல பத்திரத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அடிப்படை ஆதாரம் இல்லாமல் திமுக மீது குற்றச்சாட்டை முன்வைத்ததாகக் கூறி, பாமக நிறுவனர் ராமதாஸுக்கு எதிராக முரசொலி அறக்கட்டளையின் நிர்வாகி ஆர்.எஸ்.பாரதி எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இதையும் படிங்க;- குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி... முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் தங்கமணி..!

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவதூறு வழக்கில் மார்ச் 20-ம் தேதி நேரில் ஆஜராக மருத்துவர் ராமதாசுக்கு உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், இந்த வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரியும், தன் மீதான வழக்கு விசாரணையை ரத்து செய்யக் கோரியும் ராமதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன், வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களித்தும், வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்தும் உத்தரவிட்டு,  வழக்கு விசாரணையை 4 வார காலத்திற்கு ஒத்திவைத்தார்.