Asianet News TamilAsianet News Tamil

மோடி கொடுத்த மரண அடி.. முடிவை மாற்றிக் கொண்ட மம்தா.. இனி காங் கை நம்ப முடியாது, தலையில் அடித்து கதறும் தீதி.

மாநில கட்சிகளான திமுக, டிஆர்எஸ், உள்ளிட்ட மாநில கட்சிகள் ஒன்றிணைய வேண்டும். இனி ஒருபோதும் காங்கிரஸை நம்பி பலனில்லை, காங்கிரஸ் விரும்பினால் வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் ஒன்றிணைந்து போராடலாம் என கூறியுள்ளார். 

Modi s death blow .. Mamta who changed the decision ..  can not be trusted congress, Didi screaming.
Author
Chennai, First Published Mar 12, 2022, 10:50 AM IST

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்றால் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார். இனி ஒருபோதும் காங்கிரசை நம்பி இருக்க முடியாது, காங்கிரஸ் விரும்பினால் நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராடலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மோடி கொடுத்த மரண அடி.. 

நடந்து முடிந்த உத்தரப் பிரதேசம், கோவா, பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர் ஆகிய ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் பஞ்சாப்பை தவிர மற்ற நான்கு மாநிலங்களில் பாஜக அமோக வெற்றி பெற்றது. இதுவரை மூன்று மாநிலங்களில் ஆட்சியில் இருந்த காங்கிரசின் எண்ணிக்கை 2 ஆக குறைந்துள்ளது. காங்கிரசின் ஆட்சி ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் மட்டுமே உள்ளது. பாஜக மீதான அதிருப்தி காரணமாக இந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் பாஜக படுதோல்வியை சந்திக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தேர்தல் முடிவுகள் தலைகீழாக மாறியுள்ளது.

இதையும் படியுங்கள்: ராகுல் சுத்த வேஸ்ட்டுங்க.! காங்கிரஸிலிருந்து ராஜீவ் காந்தி குடும்பத்தினர் விலகுங்க.. பற்ற வைத்த தமிழக பிரமுகர்

Modi s death blow .. Mamta who changed the decision ..  can not be trusted congress, Didi screaming.

மம்தா காங்கிரசுக்கு அழைப்பு:

இதனால் பாஜகவின் வலிமை கூடியுள்ளது. தொடர்ந்து பாஜக காங்கிரஸ் இரண்டு கட்சிகளையும் எதிர்த்து வரும் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் காரர்களால் பாஜகவின் B டீம் என விமர்சிக்கப்பட்டு வரும் மம்தா பானர்ஜி, தற்போதைய சூழலில் தனது முடிவை மாற்றிக் கொண்டுள்ளார். அதாவது பாஜகவை எதிர்க்க விரும்பும் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என்பதுதான் அந்த புதிய முடிவு. தொடர்ந்து காங்கிரஸ் கட்சியை விமர்சித்து வரும் அவர் இனி  காங்கிரசை நம்பி பிரயோஜனம் இல்லை, எதிர்வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் விரும்பினால் அனைவரும் ஓரணியில் இணையலாம் என்றும் அவர் கூறியுள்ளார். இது அவரின் முக்கிய பார்க்கப்படுகிறது. மேலும் இது தொடர்பாக கூறியுள்ள அவர், மத்தியில் பாஜகவை அப்புறப்படுத்த வேண்டும் என்றால் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும்.

Modi s death blow .. Mamta who changed the decision ..  can not be trusted congress, Didi screaming.

இதையும் படியுங்கள்: தேர்தல் முடிவால் பரிகாசத்துக்கு ஆளான காங்கிரஸ்.. திமுக கூட்டணியில் முக்கியத்துவம் அதலபாதாளத்துக்கு செல்லுமா.?

மாநில கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்.. 

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2024 நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என கூறுவதை ஏற்க முடியாது. இது பாஜகவின் பகல்கனவு, 2024 தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ளன. அதற்கிடையில் என்ன வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம். மோடியை வீழ்த்த வேண்டுமென்றால் மிகப்பெரிய மாநில கட்சிகளான திமுக, டிஆர்எஸ், உள்ளிட்ட மாநில கட்சிகள் ஒன்றிணைய வேண்டும். இனி ஒருபோதும் காங்கிரஸை நம்பி பலனில்லை, காங்கிரஸ் விரும்பினால் வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் ஒன்றிணைந்து போராடலாம் என கூறியுள்ளார். மேலும் இவிஎம் கொள்ளை மற்றும் முறைகேடுகள் நடந்துள்ளன. சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் சோர்ந்துவிடாமல் இவிஎம் இயந்திரங்களின் தடயவியல் சோதனைகளை நாடவேண்டும். அகிலேஷ் யாதவின் வாக்கு சதவீதம் இந்த முறையில் 20 சதவீதத்தில் இருந்து 37 சதவீதமாக அதிகரித்துள்ளது என அவர் ஊக்கமளிக்கும் வகையில் பேசியுள்ளார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios