காங்கிரஸ் கட்சியிலிருந்து நேரு குடும்பத்தைச் சேர்ந்த மூவரை தூக்கி எறிந்தால்தான் அக்கட்சிக்கு இனி எதிர்காலம்” என்று கூறியிருந்தார். காங்கிரஸ் கட்சியின் பிரதான எதிரியான பாஜகவிலிருந்து ஒருவர் அப்படிப் பேசுவதை மற்றவர்கள் பொருட்டாக நினைக்க மாட்டார்கள். 

ஐந்து மாநில தேர்தல் தோல்வியை அடுத்து காங்கிரஸ் கட்சியிலிருந்து ராஜீவ் காந்தி குடும்பத்தினர் விலகி நிற்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அமெரிக்கை நாராயணன் தெரிவித்துள்ளார்.

ஐந்து மாநில தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தமிழக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறுகையில், “காங்கிரஸ் கட்சியிலிருந்து நேரு குடும்பத்தைச் சேர்ந்த மூவரை தூக்கி எறிந்தால்தான் அக்கட்சிக்கு இனி எதிர்காலம்” என்று கூறியிருந்தார். காங்கிரஸ் கட்சியின் பிரதான எதிரியான பாஜகவிலிருந்து ஒருவர் அப்படிப் பேசுவதை மற்றவர்கள் பொருட்டாக நினைக்க மாட்டார்கள்.

ஆனால், காங்கிரஸ் கட்சியிலிருந்தே அப்படி ஒரு குரல் வெளிப்படுகிறது என்றால் ,அது கவனிக்கப்படும். தமிழகத்தில் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயற்குழு உறுப்பினருமான அமெரிக்கை நாராயணன்தான் காந்தி குடும்பம் கட்சியிலிருந்து விலகி இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் இதைத் தெரிவித்துள்ளார். அதில், “ஐந்து மாநில தேர்தல் முடிவுகளுக்கு ஐந்து மாநிலங்களின் தலைமை, ராகுல், பிரியங்கா என எல்லோருமே பொறுப்பேற்க வேண்டும். ராகுல் காந்தி மிகவும் நல்லவர். ஆனால். வல்லவர் கிடையாது. அவரை வேண்டாம் என்று மக்கள் நினைக்கிறார்கள். எனவே காங்கிரஸ் கட்சியிலிருந்து நேரு குடும்பத்தினர் விலகி இருக்க வேண்டும். ஒரு ஆலமரத்தின் கீழ் எதுவுமே வளராது. அதைப் புரிந்துகொள்ள வேண்டும். நான் கட்சியின் செய்தித்தொடர்பாளர்களில் ஒருவன். நானே சொல்கிறேன், ராகுல் வேஸ்ட். ராகுல் காந்தி நிர்வாகத் திறமை இல்லாதவர். அவருக்கு மக்கள் செல்வாக்கு இல்லை. எனவே, ராஜீவ் காந்தி குடும்பம், அதிகாரம் செலுத்துவதில் இருந்து விலக வேண்டும்.

காங்கிரஸ் கட்சியில் பணத்தை வாங்கிக்கொண்டுதான் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கிறார்கள் என்று கரூர் எம்.பி. ஜோதிமணி வெளிப்படையாகவே குற்றம் சாட்டியிருந்தார். அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? ஜோதிமணி கூறியது பொய் என்றால் அவர் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். உண்மை என்றால், பணம் வாங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். இரண்டுமே நடக்கவில்லை. இப்படித்தான் காங்கிரஸ் கட்சி இருக்கிறது” என்று இப்படி அமெரிக்கை நாரயணன் அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளார்.