MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • விஜய் வைத்த அக்னிப் பரீட்சை..! திமுக அஸ்திவாரத்துக்கு ஆப்பு..! நிலைகுலையும் அறிவாலயம்..!

விஜய் வைத்த அக்னிப் பரீட்சை..! திமுக அஸ்திவாரத்துக்கு ஆப்பு..! நிலைகுலையும் அறிவாலயம்..!

வரும் 2026 தேர்தல் களம் தி.மு.க-வுக்கு ஒரு சவாலாகவும், விஜய்க்கு ஒரு அக்னிப் பரீட்சையாகவும் அமையப்போவது உறுதி. கோட்டையை நோக்கிப் பாயும் இந்த மெகா கூட்டணியின் வியூகம் பலிக்குமா?

3 Min read
Author : Thiraviya raj
Published : Mar 09 2026, 01:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
திராவிட மாடலுக்கு சவால்
Image Credit : Asianet News

திராவிட மாடலுக்கு சவால்

தமிழக அரசியலில் தவெக- என்.டி.ஏ கூட்டணி என்பது வெறும் அரசியல் நகர்வு மட்டுமல்ல; அது பல தசாப்தங்களாக நிலைபெற்றுள்ள திராவிட அரசியலின் அஸ்திவாரத்தையே அசைக்கக்கூடிய ஒரு நிலநடுக்கம். இந்தக் கூட்டணி அமைந்தால், அதன் பாதிப்பு யாரை நிலைகுலையச் செய்யும் தெரியுமா?

இந்தக் கூட்டணியால் நேரடிப் பாதிப்புக்கு உள்ளாகப்போவது ஆளுங்கட்சியான தி.மு.க-தான். தி.மு.க-வின் பலமான இளைஞர் அணி வாக்கு வங்கியில் விஜய் ஒரு பெரும் ஓட்டையைப் போடுவார். முதல்முறை வாக்காளர்கள் மற்றும் நடுநிலை வாக்காளர்கள் மாற்றம் என்ற போர்வையில் விஜயை நோக்கித் திரும்பினால், அது தி.மு.க-வின் வெற்றி வாய்ப்பை பல தொகுதிகளில் தட்டிப்பறிக்கும்.

அதிமுக,பாமக போன்ற கட்சிகள் தவெக-வின் வருகையால் தங்களின் முக்கியத்துவம் குறையுமோ என அஞ்சக்கூடும். இது என்.டி.எ கூட்டணியின் ஒற்றுமையைச் சோதிக்கும்.

25
சித்தாந்த மோதல்: யாருக்கு நெருக்கடி?
Image Credit : Asianet News

சித்தாந்த மோதல்: யாருக்கு நெருக்கடி?

இதுவரை தி.மு.க-வுக்கு மாற்றாக அ.தி.மு.க-வை மட்டுமே பார்த்து வந்த மக்கள், இப்போது விஜயை ஒரு வலுவான மாற்றாகப் பார்க்கத் தொடங்குவார்கள். அ.தி.மு.க-வின் கோட்டைகளாகக் கருதப்படும் கொங்கு மற்றும் தென் மாவட்டங்களில், பா.ஜ.க-வின் வியூகமும் விஜயின் ஈர்ப்பும் இணைந்தால், அ.தி.மு.க-வின் வாக்குகள் அப்படியே இந்த கூட்டணிக்கு வரும்.

விஜய் தனது முதல் மாநாட்டிலேயே தி.மு.க-வை 'அரசியல் எதிரி' என்றும், பா.ஜ.க-வை 'சித்தாந்த எதிரி' என்றும் அறிவித்திருந்தார். இப்போது அதே பா.ஜ.க-வுடன் கைகோர்க்கும் சூழல் உருவானால் 'சமூக நீதி' பேசும் விஜய், எப்படி பா.ஜ.க-வுடன் இணைந்தார் என தி.மு.க தரப்பு காரசாரமான விமர்சனங்களை முன்வைக்கும். இதை விஜய் எப்படித் தனது தொண்டர்களிடமும் மக்களிடமும் நியாயப்படுத்துகிறார் என்பதைப் பொறுத்தே அவரது அரசியல் எதிர்காலம் அமையும்.

Related Articles

Related image1
என்.டி.எ கூட்டணியில் இணையும் தவெக..? கச்சிதமாக முடித்த அமித் ஷா..! அதிரும் அறிவாலயம்..!
35
தமிழக அரசியலின் புதிய துருவமுனைப்பு
Image Credit : our own

தமிழக அரசியலின் புதிய துருவமுனைப்பு

இதுவரை 'திராவிடம் vs ஆரியம்' அல்லது 'திமுக vs அதிமுக' என இருந்த களம், இப்போது 'திராவிடப் பாரம்பரியம் vs புதிய தலைமுறை அரசியல்' என மாறும். விஜயின் சினிமா செல்வாக்கு + பா.ஜ.க-வின் டெல்லி அதிகாரம் + தேர்தல் வியூகம் = தி.மு.க-வுக்கு ஒரு கடுமையான சவாலாக மாறும்.

இந்தக் கூட்டணி உறுதியானால், அது தமிழகத் தேர்தல் வரலாற்றில் ஒரு 'கேம் சேஞ்சராக' அமையும் என்பதில் சந்தேகமில்லை.

இந்தக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு என்பது மிகவும் சவாலான, அதே சமயம் சுவாரஸ்யமான ஒன்றாக இருக்கும். குறிப்பாக, பாஜக ஏற்கனவே வலுவாக இருக்கும் கன்னியாகுமரி, கோவை, நீலகிரி மற்றும் நெல்லை போன்ற பகுதிகளைத் தக்கவைக்க முயல்வார்கள். அதிமுகவும் கோவை, தென் மாவட்டங்களை தக்க வைக்க முயலும். ஒரு புதிய கட்சியாக, தவெக அதிக இடங்களைப் பெற்று, சட்டசபையில் ஒரு பெரிய எதிர்க்கட்சியாகவோ அல்லது ஆளுங்கட்சியாகவோ உருவெடுக்கத் துடிக்கும். எனவே, பாஜகவுடனான பேச்சுவார்த்தையில் சமமான பங்கு என்ற அந்தஸ்தை விஜய் விட்டுக்கொடுக்க மாட்டார்.

45
தி.மு.க-வின் கோட்டைகளைத் தகர்க்கும் விஜய் ஃபேக்டர்
Image Credit : Asianet News

தி.மு.க-வின் கோட்டைகளைத் தகர்க்கும் விஜய் ஃபேக்டர்

தமிழகத்தின் குறிப்பிட்ட சில மண்டலங்களில் விஜய்யின் செல்வாக்கு, தி.மு.க-வின் வெற்றி வாய்ப்பை நேரடியாகப் பாதிக்கும். சென்னை, சென்னை புறநகர் தி.மு.க-வின் அசைக்க முடியாத கோட்டை இது. ஆனால், விஜய்க்கு இங்கு மிகப்பெரிய ரசிகர் மன்றக் கட்டமைப்பு உள்ளது. குறிப்பாக, குடிசைப் பகுதிகள் மற்றும் நடுத்தர வர்க்க இளைஞர்களிடம் விஜய்க்கு இருக்கும் ஈர்ப்பு, தி.மு.க-வின் பாரம்பரிய வாக்குகளைப் பிரிக்கும். விவசாயம் சார்ந்த டெல்டா மாவட்டங்களில், பாஜனதாவின் மீதான அதிருப்தியை விஜய்யின் புதிய முகம் ஈடுகட்டும். இங்குள்ள இளைஞர்கள் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக விஜய்யை நோக்கி நகரக்கூடும்.

கொங்கு மண்டலம் ஏற்கனவே பாஜனதா மற்றும் அ.தி.மு.க வலுவாக இருக்கும் இடம். இங்கு தவெக இணையுமானால், தி.மு.க-வால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறுவது கடினமான ஒன்றாக மாறும். இந்தக் கூட்டணி அமைந்தால், மதுரை, தென் மாவட்டங்கள் விஜய்யின் ரசிகர் பலம் + சமூக ரீதியிலான பாஜனதாவின் வாக்கு வங்கியால் திமுகவுக்கு சிக்கல் ஏற்படலாம். கோவை, திருப்பூர் பகுதிகளில் பாஜக, அதிமுகவின் அடிப்படை பலத்துடன் விஜய்யின் பிரபலம் இணைவது மாபெறும் வெற்றியை கொடுக்கும். செங்கல்பட்டு, காஞ்சிபுரம் நகர்ப்புற இளைஞர் வாக்குகளில் திமுகவுக்கு பெரும் சரிவு ஏற்படும்.

55
தி.மு.க-வின் வியூகம் என்னவாக இருக்கும்?
Image Credit : Asianet News

தி.மு.க-வின் வியூகம் என்னவாக இருக்கும்?

இந்த மெகா கூட்டணியைச் சமாளிக்க, தி.மு.க தனது திராவிட மாடல், பாசிச எதிர்ப்பு போன்ற ஆயுதங்களைக் கூர்மையாக்கும். விஜய்யை ஒரு பாஜக பி-டீம் என்று முத்திரை குத்துவதன் மூலம், சிறுபான்மையினர் வாக்குகளைத் தக்கவைக்க தி.மு.க கடுமையாகப் போராடும். விஜய் தனது கொள்கை விளக்கப் பாடல்களில் 'மதச்சார்பின்மை' பற்றிப் பேசியிருந்தாலும், தேர்தல் அரசியலில் வெற்றி பெற பாஜக போன்ற ஒரு பலமான தேசியக் கட்சியின் துணை அவருக்குத் தேவைப்படுகிறது. இது ஒருபுறம் பலமாக இருந்தாலும், மறுபுறம் அவரது தனித்துவமான அரசியல் அடையாளத்திற்கு ஒரு சவாலாகவும் அமையலாம்.

தமிழக அரசியல் களம் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் மாற்றத்தின் வாசலில் நிற்கிறது. திராவிடப் பாரம்பரியம் ஒருபுறம், தேசியவாதத்தின் வியூகம் மறுபுறம் என இருந்த களம், இப்போது விஜய்யின் வருகையால் முக்கோணப் போட்டியாக மாறியுள்ளது. தவெக - என்.டி.ஏ கூட்டணி என்பது வெறும் தேர்தல் கணக்கு மட்டுமல்ல; அது தமிழகத்தின் வாக்கு வங்கி அரசியலில் ஒரு புதிய துருவமுனைப்பை உருவாக்கும் முயற்சி.

விஜய் தனது 'சித்தாந்த எதிரி' என்று குறிப்பிட்டவர்களுடனேயே கைகோர்க்கும் சூழல் உருவானால், அதைத் தமிழக மக்கள் 'சாமர்த்தியமான அரசியல்' என்று ஏற்பார்களா? அல்லது 'சமரச அரசியல்' என்று ஒதுக்குவார்களா? என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி. எது எப்படியோ, வரும் 2026 தேர்தல் களம் தி.மு.க-வுக்கு ஒரு சவாலாகவும், விஜய்க்கு ஒரு அக்னிப் பரீட்சையாகவும் அமையப்போவது உறுதி. கோட்டையை நோக்கிப் பாயும் இந்த மெகா கூட்டணியின் வியூகம் பலிக்குமா? என்பதை காலம் தான் தீர்மானிக்க வேண்டும்.

About the Author

TR
Thiraviya raj
விஜய் (நடிகர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
என்.டி.எ கூட்டணியில் இணையும் தவெக..? கச்சிதமாக முடித்த அமித் ஷா..! அதிரும் அறிவாலயம்..!
Recommended image2
ADMK vs BJP: இரட்டை இலைக்கு செக் வைக்கும் தாமரை! பணியுமா எடப்பாடி பழனிசாமியின் படை? ஈபிஎஸ் ரகசிய மூவ் என்ன தெரியுமா?
Recommended image3
குடியரசுத் தலைவரை அவமதித்ததா மேற்கு வங்க அரசு? பிரதமர் மோடி கண்டனம்! மம்தா விளக்கம்!
Related Stories
Recommended image1
என்.டி.எ கூட்டணியில் இணையும் தவெக..? கச்சிதமாக முடித்த அமித் ஷா..! அதிரும் அறிவாலயம்..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved