பாஜக கொண்டுவந்த திட்டங்கள் உங்கள் கண்களுக்கு தெரியாது - முதல்வருக்கு வானதி பதிலடி

தமிழகத்திற்கு பாஜக கொண்டு வந்த திட்டங்கள் எதுவும் உங்கள் கண்களுக்கு தெரியாது என்று பாஜக தேசிய மகளிரணி தலைவியும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்துளளார்.
 

mla vanathi srinivasan slam dmk government in coimbatore

பாஜக தேசிய மகளிரணி தலைவியும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், இதற்கு முன்பு தமிழர் பிரதமராக  வாய்ப்புகள் வந்த போது அதை தடுத்து நிறுத்தியது திமுக. மூப்பனார் பிரதமர் ஆவதை  திமுக ஆதரிக்கவில்லை. மேட்டூரில் குறிப்பிட்ட காலத்திற்கு  தண்ணீரை திறக்க காரணம் மோடிதான். வேளாண் பட்ஜெட்டை முதன்முதலில் கொண்டு வந்ததும் பா.ஜ.கதான் என்றார்.

மேலும், எல்.முருகன், தமிழிசை ஆகியோரை பா.ஜ.க பிரதமராக்கலாம் என்று முதல்வர்  சொல்லி இருக்கின்றார். சட்டமன்ற தேர்தலில் தோற்றாலும், பட்டியல் இனத்தை சேர்ந்த எல்.முருகனை மத்திய அமைச்சராக்கியது பா.ஜ.க. பட்டியல் இனத்தவரை தமிழக துணை முதல்வராக்க வேண்டும் என்று பா.ஜ.க தொடர்ந்து வலியுறுத்தி  வருகின்றது. 9 ஆண்டு காலமாக தமிழகத்திற்கு பா.ஜ.க  எதுவும் செய்ய வில்லை என சொல்கின்றனர்.

கோவையில் சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்து 5 வடமாநில தொழிலாளர்கள் படுகாயம்

தமிழகத்தில் சிறப்பு திட்டங்கள் இல்லை என்று சொல்லி இருக்கின்றார். உண்மைதான்! சிறப்பு திட்டங்கள் கொண்டு வந்த போது கருப்பு பலூன் பறக்க  விட்டீர்கள். டிபன்ஸ் காரிடர் என்ற சிறப்பு திட்டம் தமிழகம், உ.பி ஆகிய இரு  மாநிலங்களுக்கு  மட்டுமே கொடுக்கபட்டது. பா.ஜ.க கொண்டு வந்த  சிறப்பு திட்டங்கள் உங்கள் கண்ணுக்கு தெரியாது.

ஷேர் ஆட்டோ பணிகளின் கவனத்திற்கு; மதுரையில் பெண் பயணியிடம் நகை பறிப்பு - ஓட்டுநர் கைது

9 ஆண்டு காலத்தில் என்னென்ன செய்துள்ளோம் என்பதை தினமும் பட்டியலிட்டு சொல்லி கொண்டு இருக்கின்றோம். அது உங்களுக்கு புரியவில்லையா? தமிழர்கள் 50 ஆண்டுகளுக்கு மேலாக தேசிய தலைமைகளாக உருவாக வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது என்ற அர்த்ததில்தான்  அமித்ஷா, தமிழர் பிரதமராக வேண்டும் என்பதை  சொல்லி இருக்கின்றார். மோடி பிரதமர் இல்லை என அமித்ஷா சொல்லவில்லை. ராஜாஜி, காமராஜர், வெங்கட்ராமன், சி.சுப்பிரமணியம்  போல தேசிய தலைவர்கள் தமிழகத்தில் இருந்து  வரும் சூழல்  இல்லை என்பதையே அமித்ஷா  குறிப்பிட்டு சொல்லியிருப்பதாக தெரிவித்துள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios