இடைத்தேர்தலில் இபிஎஸ்க்கு மக்கள் பாடம் புகட்டியுள்ளனர்!நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டம்-மு.க.ஸ்டாலின் அதிரடி
ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி நாடாளுமன்ற தேர்தலுக்கு அச்சாரமாக இருக்கும் என தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின், நான் ஏற்கனவே தேசிய அரசியலில் இருப்பதாகவும், யார் பிரதமராக வரவேண்டும் என்பதை விட யார் பிரதமராக வரக்கூடாது என்பதற்காக நடைபெறுகின்ற தேர்தல் தான் நாடாளுமன்ற தேர்தல் என தெரிவித்தார்.
வரலாற்றில் பதிவு செய்யக்கூடிய வெற்றி
ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 8 ஆம் சுற்று முடிவில் 30ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். இதனையடுத்து சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈ வி கே எஸ் இளங்கோவனுக்கு மகத்தான வெற்றியை, வரலாற்றில் பதிவு செய்யக்கூடிய வெற்றி பெற உள்ளார். மிகப்பெரிய வெற்றியை கொடுத்த ஈரோடு கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். திராவிடமாடல் ஆட்சிக்கு ஆதரவு தர வேண்டுமென பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டேன். இதற்கான ஆதரவை மக்கள் மிகப்பெரிய அளவில் அளித்துள்ளனர்.
இபிஎஸ்க்கு பாடம் புகட்டிய மக்கள்
இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தன்னை மறந்து நாளாந்தர பேச்சாளராக பேசி உள்ளார். இதற்கு மக்கள் தக்க பாடத்தை வழங்கியுள்ளனர். 20மாத கால ஆட்சிக்கு மக்கள் ஆங்கீகாரம் கொடுத்துள்ளனர். திமுக அரசின் ஆட்சியை எடை போட்டு மிகப்பெரிய வெற்றியை தேடி தந்துள்ளனர். இந்த தேர்தலில் தீவிரமாக பணியாற்றிய அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாக கூறினார். இந்த வெற்றி நாடாளுமன்ற தேர்தலுக்கு அச்சாரமாக இருக்கும். நான் ஏற்கனவே தேசிய அரசியலில் இருப்பதாக கூறியவர், யார் பிரதமராக வரவேண்டும் என்பதை விட யார் பிரதமராக வரக்கூடாது என்பதற்காக நடைபெறுகின்ற தேர்தல் தான் நாடாளுமன்ற தேர்தல் என தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்