திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த 3 அவதூறு வழக்குகளை எம்.பி., எம்.எல்.ஏ.க்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

உள்ளாட்சித் துறை அமைச்சர் மற்றும் தமிழகம் முதல் மாநிலமாக தேர்வு செய்தவர்களை உதைக்க வேண்டும் என அவதூறு கருத்துக்களை தெரிவித்தார். மேலும், குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக விமர்சித்ததாகவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது தமிழக அரசு சார்பில் 3 அவதூறு வழக்குகள் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. அந்த மனுக்களில், தமிழக அரசின் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் அவதூறாக பேசிய ஸ்டாலினை, அவதூறு சட்டப்பிரிவுகளின் கீழ் தண்டிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. 

இதையும் படிங்க;- நள்ளிரவில் முனங்கல் சத்தம்.. கள்ளக்காதலுடன் உல்லாசமாக இருந்த மனைவி.. நேரில் பார்த்த கணவர் எடுத்த விபரீத முடிவு

இந்த வழக்கில் மு.க.ஸ்டாலின் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்குகளை ரத்து செய்யக்கோரி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இதுதொடர்பான மனு நிலுவையில் இருந்து வருகிறது. 

இதையும் படிங்க;- மனைவியின் தம்பி பொண்டாட்டி மீது அடங்காத காமவெறி... கள்ளக்காதலனுடன் கணவரை போட்டுத்தள்ளி ஆத்திரம்..!

இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி செல்வக்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது மு.க.ஸ்டாலின் தரப்பில் ஆஜராகியிருந்த வழக்கறிஞர் இந்த 3 வழக்குகளையும் ரத்து செய்யக்கோரியும், நேரில் ஆஜராகுவதில் இருந்து விலக்கு அளிக்குமாறும் வாதிட்டார். மேலும், வழக்கு விசாரணைக்கு தடை கேட்டு தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருவதாகவும் ஆகையால், வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் கோரிக்கை வைத்தார். 

ஆனால், இதனை ஏற்க மறுத்த நீதிபதி மு.க.ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினராக இருப்பதால் இந்த வழக்கை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றுவதாக நீதிபதி உத்தரவிட்டார். மேலும், இதுதொடர்பான வழக்கை ஏப்ரல் 8-ம் தேதியன்று சிறப்பு நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். அப்போது, மு.க.ஸ்டாலின் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.