ஆளுநர் மாளிகையை சனாதனக் கூடாரமாக மாற்றும் ஆர்என் ரவி.!வள்ளலாரின் நெறிமுறைகளை சிதைப்பதா.?தங்கம் தென்னரசு ஆவேசம்

 ஆளுநர் மாளிகையை சனாதனக் கூடாரமாக மாற்றும் ஆளுநரின் கருத்துக்கள் முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டியவை என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

Minister thangam thennarasu against Governor Ravi comments regarding Vallalar

சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார்

கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலாரின் 200 ஆவது ஜெயந்தி விழாவில் கலந்து கொண்ட ஆளுநர் ரவி பேசும்போது 10,000 வருட சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார் என தெரிவித்தார். சனாதன தர்மத்தின் மாணவனாகிய நான் பல ரிஷிகளின் நூல்களைப் படித்தவன். வள்ளலாரின் நூல்களையும் படித்தபோது மிக பிரமிப்படைந்ததாகவும் கூறினார். 200 ஆண்டுகளுக்கு முன் காரிருளை நீக்க வந்த ஜோதிதான் வள்ளலார்.  நமது பாரதம் சனாதன தர்மத்தால் ஆனது. அறியாமை மற்றும் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே சிலர் சனாதன தர்மத்தை எதிர்க்கிறார்கள். ஆன்மிகத்தில் உயர்ந்த நாடு இந்தியா. பாரத தேசத்தில் ஆயிரக்கணக்கான மார்க்கங்கள், வழிபாட்டு முறைகள் இருந்தன.

Minister thangam thennarasu against Governor Ravi comments regarding Vallalar

ஆளுநரின் கருத்திற்கு எதிர்ப்பு

யார் வேண்டுமானாலும் எந்த மார்க்கத்தை வேண்டுமானாலும் பின்பற்றலாம் என்ற நிலை இருந்தது. அதைத்தான் சனாதன தர்மம் போதிக்கிறது என தெரிவித்திருந்தார். இந்தநிலையில் ஆளுநரின் கருத்திற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சனாதன தர்மத்திற்கு எதிரானவர் வள்ளலார் என தெரிவித்திருந்தனர்.  இந்த நிலையில் இது தொடர்பாக தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட டுவிட்டர் பதிவில், சமரச சுத்த சன்மார்க்க நெறிக்கும், சனாதன தர்மத்திற்குமான அடிப்படை வேற்றுமையைக் கூட அறிந்து கொள்ளாமல், வடலூர் வள்ளல் பெருமாள் வழிகாட்டிய நெறிமுறைகளை முற்றிலும் சிதைத்து சனாதனப் போர்வைக்குள் சன்மார்க்க நெறியினைப் புகுத்தும் முயற்சியில்,

 

முற்றிலும் நிராகரிக்கப்படனும்

“தா்ம ரட்சராகப்“ புதிய அவதாரம் மேற்கொண்டிருக்கும் தமிழ்நாடு ஆளுநர் அவா்கள் ஈடுபட்டிருக்கிறார், தமிழ்ப் பண்பாடும் - விழுமியங்களும் தனித்தியங்கும் தன் இயல்பினைக் கொண்டவை என்பதை பல்லாயிரமாண்டு தமிழ்ச் சமூக நாகரீகச் சுவடுகள் நமக்கு வெள்ளிடை மலையாக உணர்த்தி இருக்கின்றன. ஒன்றிய அரசின் “தனிப்பெருங் கருணை“ ஏதோ ஒரு விதத்தில் வாய்க்கப் பெற்றுவிட்டதாலேயே ஆளுநர் மாளிகையை சனாதனக் கூடாரமாக மாற்றும் ஆளுநரின் கருத்துக்கள் முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டியவை என தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

சனாதனத்தின் உச்சநட்சத்திரம் வள்ளலார்! பிஷப் போப், கால்டுவெல் நமது அடையாளத்தை அழிக்க நினைத்தவர்கள்.!ஆளுநர் ரவி

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios