Asianet News TamilAsianet News Tamil

அரசியல் கருத்து சொல்ல வேண்டும் என்பதற்காக எதையாவது சொல்ல கூடாது.. தமிழ் மகன் உசேனுக்கு அமைச்சர் பதில்..!

கோவை காளப்பட்டி சாலையில் உள்ள தனியார்  ஓட்டலில் ஒருங்கிணைந்த திமுக மாவட்ட  செயற்குழு கூட்டம் அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் நடைபெற்றது. 

Minister Senthil Balaji response to Tamil Magan Hussain
Author
First Published Nov 9, 2022, 2:44 PM IST

கோவையில் எந்த பணிகளும் நடைபெறவில்லை என அதிமுக அவை தலைவர் தமிழ் மகன் உசேன் கூறியதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளித்துள்ளார்.

கோவை காளப்பட்டி சாலையில் உள்ள தனியார்  ஓட்டலில் ஒருங்கிணைந்த திமுக மாவட்ட  செயற்குழு கூட்டம் அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி;- கோவை மாநகரில் 211 கோடிக்கு சாலை பணிகள்  நடைபெறுகின்றது. இது அதிமுக ஆட்சியில் நடந்து இருக்க வேண்டிய பணிகள் என தெரிவித்தார். அதிமுக ஆட்சியில் அலங்கார பணிகளுக்குதான் வேலைகள் நடந்ததே தவிர அடிப்படை வசதிகளுக்கான பணிகள் நடக்கவில்லை என்றார். சாலையின்  முக்கயத்துவத்தை கவனத்தில் கொண்டு இந்த ஆட்சியில் பணிகள் நடைபெற்று வருகின்றது. 

இதையும் படிங்க;- அமித் ஷா மகனுக்கு ஒரு சட்டம்.. பொன்முடி மகனுக்கு ஒரு சட்டமா? திமுகவுக்கு எதிராக சீறிய சி.வி. சண்முகம்..!

Minister Senthil Balaji response to Tamil Magan Hussain

கோவை விமானநிலைய விரிவக்கம் அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டு இருந்தது. திமுக ஆட்சி வந்த பின் விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் எடுக்க நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றது. 3  மாதத்தில் பணிகள் முழுமையாக நிறைவு பெறும் என்றார். அரசியல் கருத்து சொல்ல வேண்டும் என்பதற்காக எதையாவது சொல்ல கூடாது. என்ன நடந்திருக்கின்றது என்பதை பார்த்து சொல்ல வேண்டும். 

Minister Senthil Balaji response to Tamil Magan Hussain

மேலும் கோவை மாவட்டத்தில் நிலுவையில் உள்ள பாலப்பணிகள் விரைவில் முடிக்கப்படும். ஒருங்கிணைந்த திமுக அலுவலகம் கட்ட புதிய இடம் அவினாசி சாலையில் தேர்வு செய்யப்பட்டு  வாங்கப்பட்டுள்ளது. இதில்  கட்டிட பணிகள் விரைவாக துவங்க இருக்கின்றது. நாளை கோவை விமான நிலையம் வரும் முதல்வர் ஈரோட்டில் நடைபெறும் நிகழ்வுகளில் பங்கேற்ற பின், நாளை மறு தினம் கரூரில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கும் உத்தரவுகளை வழங்கும் விழாவில் பங்கேற்கின்றார் என  செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

இதையும் படிங்க;-  அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான பணமோசடி வழக்கு.. தீர்ப்புக்கு நாள் குறித்த நீதிமன்றம்..!

Follow Us:
Download App:
  • android
  • ios