அமித் ஷா மகனுக்கு ஒரு சட்டம்.. பொன்முடி மகனுக்கு ஒரு சட்டமா? திமுகவுக்கு எதிராக சீறிய சி.வி. சண்முகம்..!

தமிழக அரசு செயல்படாமல் இருப்பதை ஆளுநர் சுட்டிக்காட்டினால், உடனடியாக ஆளுநரை மாற்ற வேண்டும் என்று அவருக்கு மிரட்டல் விடுக்கும் வேலைகளைச் செய்கிறார்கள். இதன் மூலம் திமுக அரசு தன்னுடைய கையாலாகாத தனத்தை வெளிப்படையாகக் காட்டி வருகிறது என்றார்.

Amit Shah is a law for son.. Ponmudi is a law for son? CV Shanmugam

தமிழகத்தில் பால் விலை ஒரே நாளில் 12 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் 40% அளவிற்குப் பால் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது என  சி.வி. சண்முகம் கூறியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் வானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் அதிமுக 51வது தொடக்க விழாவை முன்னிட்டு முன்னாள் அமைச்சரும், எம்.பி.யுமான சி.வி. சண்முகம் கொடியேற்றி இனிப்பு வழங்கினார். அப்போது, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- கோவை குண்டுவெடிப்பைப் பற்றி முதல்வர் ஸ்டாலின் இன்று வரை வாய் திறக்கவே இல்லை. முதல்வரின் மௌனம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகிறது. தமிழகத்தில் பால் விலை ஒரே நாளில் 12 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் 40% அளவிற்குப் பால் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. மக்களைப் பற்றிச் சிந்திக்காமல் தானும், தன் குடும்பமும் வாழ வேண்டும் என பொம்மை முதல்வர் கனவு உலகத்தில் வாழ்ந்து கொண்ருக்கிறார் என கடுமையாக விமர்சித்துள்ளார். 

இதையும் படிங்க;- அவதூறுகளை அள்ளிவீசி உண்மையை மறைக்க சி.வி.சண்முகம் திட்டம்..? இறங்கி அடிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

Amit Shah is a law for son.. Ponmudi is a law for son? CV Shanmugam

தமிழக அரசு செயல்படாமல் இருப்பதை ஆளுநர் சுட்டிக்காட்டினால், உடனடியாக ஆளுநரை மாற்ற வேண்டும் என்று அவருக்கு மிரட்டல் விடுக்கும் வேலைகளைச் செய்கிறார்கள். இதன் மூலம் திமுக அரசு தன்னுடைய கையாலாகாத தனத்தை வெளிப்படையாகக் காட்டி வருகிறது என்றார்.

இதையும் படிங்க;-  கோடிகளுக்கு விலைபோன கம்யூனிஸ்ட்.. திமுகவுக்கு ஜால்ரா அடிக்கும் பாலகிருஷ்ணன்.. சீறும் சி.வி.சண்முகம்..!

Amit Shah is a law for son.. Ponmudi is a law for son? CV Shanmugam

மேலும், அமித்ஷா மகனுக்கு இந்திய கிரிக்கெட் வாரியத்தில் தலைவர் பதவியைக் கொடுத்த போது அதற்கு திமுகவினர் எதிர்ப்பு கிளப்பினர். இப்போது பொன்முடி மகனுக்கு தமிழ்நாடு கிரிக்கெட் வாரியத்தில் பதவி கொடுத்திருக்கிறார்கள். அவருக்கு எப்படி பதவி கொடுத்தார்கள் எனக் கேள்வி எழுப்பினால், அதற்கு அவர்களால் பதில் அளிக்க முடியவில்லை எனவும் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.

இதையும் படிங்க;-  ஆரஞ்சை தொடர்ந்து நீலம், பச்சை பால் பாக்கெட் விலையை உயர்த்த திமுக திட்டம்.. அதிர்ச்சி தகவல் கூறும் டிடிவி..!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios