ஆரஞ்சை தொடர்ந்து நீலம், பச்சை பால் பாக்கெட் விலையை உயர்த்த திமுக திட்டம்.. அதிர்ச்சி தகவல் கூறும் டிடிவி..!
ஆவின் ஆரஞ்சு பால் விலையை திமுக அரசு திடீரென உயர்த்தியிருப்பது கண்டனத்திற்குரியது. கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.3 சேர்த்து கொடுப்பதாகக் கூறிவிட்டு, விற்பனை விலையில் லிட்டருக்கு ரூ.12 அதிகப்படுத்தியிருக்கிறார்கள்.
ஆவின் ஆரஞ்சு பால் விலையை திமுக அரசு திடீரென உயர்த்தியிருப்பது கண்டனத்திற்குரியது என டிடிவி. தினகரன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் ஆரஞ்சு நிற பாக்கெட் பால் விலை லிட்டருக்கு ரூ.12 உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த விலை ஏற்றம் நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது. இந்த விலை உயர்வுக்கு அன்புமணி ராமதாஸ், டிடிவி.தினகரன் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க;- ஆவின் ஆரஞ்சு நிற பாக்கெட் பால் விலை லிட்டருக்கு ரூ. 12 உயர்வு! இது ஏழை மக்களை பாதிக்கும்! எதிர்க்கும் அன்புமணி
இதுகுறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- ஆவின் ஆரஞ்சு பால் விலையை திமுக அரசு திடீரென உயர்த்தியிருப்பது கண்டனத்திற்குரியது. கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.3 சேர்த்து கொடுப்பதாகக் கூறிவிட்டு, விற்பனை விலையில் லிட்டருக்கு ரூ.12 அதிகப்படுத்தியிருக்கிறார்கள்.
இதையும் படிங்க;- விடியலாட்சி தருவோம் சொன்ன முதல்வரே ஏண்டா விடியுது என புலம்பும் அளவுக்கு நிலைமை இருக்கு.. டிடிவி. விமர்சனம்..!
மற்ற ஆவின் பால் வகைகளின் விலையையும் அடுத்தடுத்து உயர்த்த மக்கள் விரோத திமுக அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. உயர்த்தப்பட்ட ஆவின் ஆரஞ்சு பால் விலையைக் குறைப்பதுடன், மற்ற பால் விலையையும் உயர்த்தக்கூடாது என திமுக அரசை வலியுறுத்துகிறேன் என்று டிடிவி. தினகரன் கூறியுள்ளார்.
இதையும் படிங்க;- ஆவின் ஆரஞ்சு பால் பாக்கெட் விலை ரூ.60 ஆக உயர்வு..!