சிக்கலில் அமைச்சர் செந்தில் பாலாஜி.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி..!

தற்போதைய மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 2011 முதல் 2015ஆம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்து வந்தார். அப்போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் மோசடி செய்ததாக அவர் மீது ஏராளமானோர் புகார் கொடுத்தனர்.

Minister Senthil Balaji petition dismissed

போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்துள்ளது. 

தற்போதைய மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 2011 முதல் 2015ஆம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்து வந்தார். அப்போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் மோசடி செய்ததாக அவர் மீது ஏராளமானோர் புகார் கொடுத்தனர். இது அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது, அதிமுக ஆட்சி என்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் போலீசார் வழக்கை கிடப்பில் போட்டனர்.

இதையும் படிங்க;- ஒத்த ஓட்டு ஓட்டைவாய் அண்ணாமலை.. உளறிக் கொட்டாதீங்க.. சும்மா எகிறி அடிக்கும் செந்தில் பாலாஜி..!

Minister Senthil Balaji petition dismissed

ஆனால் சைபர் கிரைம் அவர் மீது வழக்கு மட்டுமே பதிவு செய்தது. செந்தில் பாலாஜியின் கூட்டாளிகள் பிரபு, சகாயராஜ், தேவசகாயம், அன்னராஜ் ஆகியோர் மீது நம்பிக்கை மோசடி மற்றும் ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ்  மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.  தற்போது இந்த வழக்கு சென்னை எம்.பி எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் உள்ளது. 

இந்நிலையில், சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மூன்று வழக்குகளை ரத்து செய்யக் கோரி அமைச்சர் செந்தில்பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி வி.சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை காரணமாகவே தன் மீது இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதால் வழக்கை ரத்து செய்ய வேண்டுமென வாதிடப்பட்டது. இதற்கு அமலாக்கத்துறை தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 

புகார்தாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ஏழ்மையான மக்கள் பணம் கொடுத்து ஏமாந்துள்ளதாகவும், மீண்டும் புதிதாக விசாரணை நடத்த வேண்டும் எனவும், வழக்கை ரத்து செய்யக் கூடாது எனவும் வாதிடப்பட்டது. காவல் துறை தரப்பில் செந்தில் பாலாஜி மீதான புகார் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்கள் மீது வரும் திங்கட்கிழமை தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

Minister Senthil Balaji petition dismissed

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், வழக்கில் இருந்து விடுவிக்க கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மேலும், இந்த வழக்கில் தங்களையும் இணைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்ற அமலாக்கத் துறையின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. செந்தில் பாலாஜி மீதான புகார்களை மீண்டும் புதிதாக விசாரணை நடத்த வேண்டும் என்று மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு நீதிபதி சிவஞானம் உத்தரவிட்டுள்ளார்.  

இதையும் படிங்க;- கோர்ட்டில் அமலாக்கத்துறை எடுத்து வைத்த வாதம்.. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிக்கல்?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios