கோர்ட்டில் அமலாக்கத்துறை எடுத்து வைத்த வாதம்.. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிக்கல்?
தற்போதைய மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 2011 முதல் 2015 ஆம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்து வந்தார். அப்போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் மோசடி செய்ததாக அவர் மீது ஏராளமானோர் புகார் கொடுத்தனர்.
போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கூடாது என அமலாக்கத்துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 2011 முதல் 2015 ஆம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்து வந்தார். அப்போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் மோசடி செய்ததாக அவர் மீது ஏராளமானோர் புகார் கொடுத்தனர். இது அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது, அப்போது அதிமுக ஆட்சி என்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் போலீசார் வழக்கை கிடப்பில் போட்டனர்.
இதையும் படிங்க;- குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்.. எடப்பாடி துரோகம் எல்லோருக்கும் தெரியும். ரவுண்டு கட்டி அடித்த ஸ்டாலின்.
ஆனால் சைபர் கிரைம் அவர் மீது வழக்கு மட்டுமே பதிவு செய்தது. செந்தில் பாலாஜியின் கூட்டாளிகள் பிரபு, சகாயராஜ், தேவசகாயம், அன்னராஜ் ஆகியோர் மீது நம்பிக்கை மோசடி மற்றும் ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தற்போது இந்த வழக்கு சென்னை எம்.பி எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் உள்ளது.
இந்நிலையில், சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி அமைச்சர் செந்தில்பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி வி.சிவஞானம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை காரணமாகவே தன் மீது இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதால் வழக்கை ரத்து செய்ய வேண்டுமென வாதிடப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமலாக்கத் துறை தரப்பில் வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆஜராகி, வேலைக்காக கொடுத்த இரண்டரை லட்சம் ரூபாயைக் கொடுத்து ஏமாந்தவர்கள், தற்போது அந்த வழக்கையே திரும்பப்பெற லட்சக்கணக்கான ரூபாயை செலவழித்து இந்த வழக்கை நடத்துவது ஆச்சரியமளிப்பதாக தெரிவித்தார். மேலும், தற்போதைய தமிழக அரசில் அதிகாரமிக்க நபராக உள்ள செந்தில் பாலாஜி மீதான குற்றச்சாட்டை அடிப்படையாக கொண்டு தான் வழக்குப்பதிவு செய்துள்ளதால், வழக்கை ரத்து செய்யக்கூடாது என வாதிட்டார். இரு தரப்பு வாதங்கள் நிறைவடையாததால், வழக்கின் விசாரணையை அக்டோபர் 28-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க;- அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சுத்துபோடும் அமலாக்கத்துறை.. காப்பாற்ற அதிரடியாக கோரிக்கை வைத்த தமிழக அரசு.!