Asianet News TamilAsianet News Tamil

பொங்கல் பரிசு பொருட்கள் 9ஆம் தேதி முதல் விநியோகம்.! வாங்க தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு- சக்கரபாணி தகவல்


60% பொங்கல் பரிசு பொருட்கள் அந்தந்த மாவட்டங்களுக்கு சென்றடைந்து விட்டன மீதமுள்ள பொருட்கள் ஓரிரு நாட்களில் முழுவதுமாக சென்றடையும் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
 

Minister sakkarapani said that the Pongal gifts will be distributed from the 9th
Author
First Published Jan 3, 2023, 1:04 PM IST

9 ஆம் தேதி முதல் பொங்கல் பொருட்கள்

உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை சென்னை, கோபாலபுரம்,  உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக சேமிப்பு கிடங்கில் உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி பொங்கல் பொருட்கள் விநியோகம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், பொங்கல் பொருட்கள் வழங்கும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜனவரி 9 ஆம் தேதி தொடங்கி வைக்க இருப்பதாக கூறினார். அனைத்து மாவட்டங்களிலும் 9- ஆம் தேதி முதல் 12- ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு நியாய விலைக் கடைகளில் உங்கள் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

குடியரசு தின அலங்கார ஊர்தி..! தமிழகத்திற்கு இந்தாண்டாவது அனுமதியா.? இறுதி பட்டியல் வெளியிட்ட மத்திய அரசு

Minister sakkarapani said that the Pongal gifts will be distributed from the 9th

இன்று முதல் டோக்கன்

ஜனவரி 12- ஆம் தேதிக்குள் பொங்கள் பரிசுத்தொகுப்பு  பெற முடியாதவர்களுக்கும் வெளியூரில் வசிப்பவர்கள் மற்றும் விடுபட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு  ஜனவரி 13-ம் தேதியன்று பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என தெரிவித்தார். பொங்கல் பரிசுத் தொகுப்பாக ரூ.1,000 ரொக்கம், தலா ஒரு கிலோ அரிசி, சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு வழங்கப்பட இருப்பதாக தெரிவித்தார்.  குடும்ப அட்டைதாரர்கள் 2.19 கோடி பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட இருக்கிறது என்றும் இன்று முதல் டோக்கன் வழங்கக் கூடிய பணி தொடங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். பரிசு தொகுப்புக்கான பொருட்கள் மற்றும் மாதந்தோறும் வழங்கும் பொருட்கள் 60 விழுக்காடு அனைத்து மாவட்டங்களுக்கும் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது.

Minister sakkarapani said that the Pongal gifts will be distributed from the 9th

இடைத்தரகர்களுக்கு எச்சரிக்கை

இன்னும் இரண்டு நாட்களில் 100 சதவீத பொருட்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் கொண்டு சேர்க்கப்படும். தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கரும்பு கொள்முதல் செய்யப்படுகிறது என்றும் விவசாயிகளுக்கு பயன் அளிக்கும் வகையில், அவர்களிடம் இருந்து பெறப்படும் ஒரு கரும்பின் விலை ரூ.33- ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அந்தந்த மாவட்டங்களில் மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு கொள்முதல் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இடைத்தரகர்கள் இல்லாமல் கரும்பு கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

வாயைக் கொடுத்து மாட்டிக் கொண்ட ஜெயக்குமார்.. பிளாஷ்பேக்கை சொல்லி அதிமுகவை டேமேஜ் செய்த வழக்கறிஞர் பாலு.!

Follow Us:
Download App:
  • android
  • ios