வாயைக் கொடுத்து மாட்டிக் கொண்ட ஜெயக்குமார்.. பிளாஷ்பேக்கை சொல்லி அதிமுகவை டேமேஜ் செய்த வழக்கறிஞர் பாலு.!

அதிமுக நான்காக உடைந்து இருக்கிறது. திமுக மீது விமர்சனம் பலமாக இருக்கிறது. மற்ற கட்சியை எடுத்துக்கொண்டால் சத்தம் மட்டுமே அதிகம் கேட்கிறது என்று பேசியிருந்தார். இதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்திருந்தார். 

pmk advocate balu response to former minister Jayakumar

அதிமுக வீழ்ந்து கிடந்தபோது அதற்கு உயிர் கொடுத்தது பாமகதான்; ஜெயக்குமார் விமர்சனங்களை முன்வைக்கும்போது கவனத்துடன் பேச வேண்டும் என ஜெயக்குமார் விமர்சனத்துக்கு பாமக வழக்கறிஞர் பாலு பதிலளித்துள்ளார். 

பாமக சார்பில் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், அக்கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டு பேசுகையில்;- அதிமுக நான்காக உடைந்து இருக்கிறது. திமுக மீது விமர்சனம் பலமாக இருக்கிறது. மற்ற கட்சியை எடுத்துக்கொண்டால் சத்தம் மட்டுமே அதிகம் கேட்கிறது என்று பேசியிருந்தார். இதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்திருந்தார். 

இதையும் படிங்க;- ADMK VS PMK : பாமகவை ஏற்றிவைத்த ஏணியே அதிமுக தான்.. நன்றி மறந்த அன்புமணி - வார்னிங் கொடுத்த ஜெயக்குமார்

pmk advocate balu response to former minister Jayakumar

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- உண்மையில் ஒருபக்கம் வருத்தமும் வேதனையும். ஒருபக்கம் கடுமையான கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். பாமகவை ஏற்றிவைத்த ஏணியே ஜெயலலிதா தான். அதிமுக ஏற்றி விடவில்லை என்றால் பாமக என்ற கட்சியே கிடையாது. ஜெயலலிதா ஆட்சியில் 5 சீட்டு கொடுத்ததால்தான், 4 இடத்தில் வெற்றி பெற்றனர். அந்த 4 இடத்தில் வெற்றி பெற்றதால் தான் இந்திய தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைத்தது.

நன்றி மறந்து அன்புமணி ராமதாஸ் இப்படி பேசினால் தமிழ்நாட்டு மக்கள் மட்டுமல்ல, உங்கள் பக்கம் உள்ள தொண்டர்கள் கூட உங்களை மதிக்க மாட்டார்கள். அதிமுகதான் அன்புமணி ராமதாசுக்கு எம்.பி. என்ற பதவியை அடையாளம் காட்டியது. அதிமுகவை சிறுமைப்படுத்துகின்ற வேலையை அன்புமணி ராமதாஸ் செய்தால் அதற்கான தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று கடுமையாக விமர்சித்திருந்தார். இவரது விமர்சனதத்திற்கு பாமக வழக்கறிஞர் பாலு சரியான பதிலடி கொடுத்துள்ளார். 

pmk advocate balu response to former minister Jayakumar

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த  வழக்கறிஞர் பாலு;- 1998ல் ஜெயலலிதா பாமக அலுவலகத்தை தேடி வந்து ராமதாஸூடன் பேசி கூட்டணி அமைத்துதான் வெற்றி பெற்றார். பாமக தயவில் தான் ஜெயலலிதா முதலமைச்சரானார் என்று நாங்கள் ஒருபோம் கூறியது இல்லை. ஜெயக்குமார் விமர்சனங்களை முன்வைக்கும் போது கவனத்துடன் பேச வேண்டும். அன்புமணி ராமதாஸ் தனது விமர்சனம் குறித்து விளக்கிய பிறகும் இப்படி விமர்சனம் செய்தது தவறானது. எதை சொல்லவேண்டும் என்பதை விட எதை சொல்லக்கூடாது என்பதில் ஜெயக்குமார் கவனமாக இருக்க வேண்டும். 

இதையும் படிங்க;- தனியாரிடம் செல்லும் என்எல்சி.. 2 ‘திமுக’ அமைச்சர்கள் காரணம் - பரபரப்பை கிளப்பும் அன்புமணி ராமதாஸ்!

 

pmk advocate balu response to former minister Jayakumar

ஜெயக்குமார் அமைச்சராக நீடித்ததற்கும் பாமக தான் காரணம். கடந்த கால அதிமுக வரலாற்றை ஜெயக்குமார் திரும்பி பார்க்க வேண்டும். ஜெயக்குமார் பேசியது குறித்து எடப்பாடி பழனிசாமி  விளக்கம் கொடுக்க வேண்டும். அதிமுக வீழ்ந்து கிடந்தபோது அதற்கு உயிர் கொடுத்தது பாமக தான். அன்புமணி எம்.பி. ஆனதில் ஜெயக்குமார் பங்கு என்ன என்று பாலு கேள்வி எழுப்பியுள்ளார். கூட்டணி ஒப்பந்தத்தின் படியே அன்புமணிக்கு அதிமுக சார்பில் எம்.பி. பதவி வழங்கப்பட்டது. அதிமுக பிளவுபட்டுள்ளது சாதாரண குழந்தைக்கும் தெரியும். ஊடகங்கள் நடத்தும் விவாதங்களுக்கு ஜெயக்குமார் ஏன் மறுப்பு தெரிவிக்கவில்லை என வழக்கறிஞர் பாலு கேள்வி எழுப்பியுள்ளார். 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios