ADMK VS PMK : பாமகவை ஏற்றிவைத்த ஏணியே அதிமுக தான்.. நன்றி மறந்த அன்புமணி - வார்னிங் கொடுத்த ஜெயக்குமார்
அன்புமணி ராமதாஸ் எம்.பி ஆனதே அதிமுகவால் தான் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.
பாமகவை ஏற்றிவைத்த ஏணியே அதிமுகதான். அதிமுக ஏற்றி விடவில்லை என்றால் பாமக என்ற கட்சியே கிடையாது என்று விமர்சித்துள்ளார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். அப்போது பேசிய அவர், அன்புமணி ராமதாஸ் குறித்த கேள்விக்கு, ஒரு பக்கம் வருத்தமும் வேதனையும் உள்ளது. மறுபக்கம் கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
இதையும் படிங்க..Swiggy : புத்தாண்டில் காண்டம் விற்பனை அமோகம்.. நம்பர் 1 இடத்தை பிடித்த பிரியாணி - ஸ்விக்கி சூப்பர் தகவல்
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
பாமகவை ஏற்றிவைத்த ஏணியே அதிமுகதான். அதிமுக ஏற்றி விடவில்லை என்றால் பாமக என்ற கட்சியே கிடையாது. அன்புமணி ராமதாஸ் இதனை நினைத்துப் பார்க்க வேண்டும். ஜெயலலிதா ஆட்சியில் 5 சீட்டு கொடுத்ததால்தான், 4 இடத்தில் வெற்றி பெற்றனர். அந்த 4 இடத்தில் வெற்றி பெற்றதால் மட்டுமே இந்திய தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைத்தது.
அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ் அப்படி பேசினால் உங்கள் பக்கம் உள்ளவர்கள் கூட உங்களை மதிக்க மாட்டார்கள். அதிமுகவால் மட்டுமே சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் உள்ளே சென்றீர்கள் என்பதை நினைத்து பார்க்க வேண்டும். பலம் வாய்ந்த அதிமுகவை சிறுமைப்படுத்த வேண்டும் என்று நினைத்து பேசினால் அதிமுக சிறுமை வாய்ந்ததாக மாறி விடுமா ? என்று கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க..ஹே ராம் முதல் மொழி திணிப்பு வரை.. கடைசியில் கமல் ஹாசனுக்கு ராகுல் கொடுத்த சர்ப்ரைஸ் - என்ன தெரியுமா?
அதிமுக Vs பாமக
தொடர்ந்து பேசிய அவர், அதிமுகதான் அன்புமணி ராமதாசுக்கு எம்பி என்ற பதவியை அடையாளம் காட்டியது. அன்புமணி ராமதாஸின் கருத்தை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். சிறுமைப்படுத்துகின்ற வேலையை அன்புமணி ராமதாஸ் செய்தால் அதற்கான தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று கடுமையாக விமர்சித்து பேசினார்.
இதையும் படிங்க..Chidambaram : ரூ.1,000 வேணுமா.? திமுக மாதிரி நாம கொள்ளையடிக்கணும்.. சர்ச்சையை கிளப்பிய ப.சிதம்பரம்