நான் பணக்காரி இல்லை.. ஒன்றரை கோடி காரை மகனுக்கு பரிசாக கொடுத்த ரோஜா - வச்சு செய்யும் நெட்டிசன்கள்!
நடிகை ரோஜா தனது மகன் கௌஷிக்குக்கு சமீபத்தில் பென்ஸ் கார் ஒன்றினை வாங்கி தந்துள்ளார்.
ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கடந்த 2019ஆம் ஆண்டில் முதல்வராக பதவி பொறுப்பேற்றார். இதையடுத்து ஜெகன் அமைச்சரவையில் 25 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். ஆனால் அவர்கள் இரண்டரை ஆண்டுகள் மட்டுமே அந்த பதவியில் நீடிப்பர் என ஜெகன் முன்னரே தெரிவித்திருந்தார்.
மேலும் அந்த 25 பேருக்கு பதில் புதியவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்றும் அவர்கள் மீதமுள்ள இரண்டரை ஆண்டுகளுக்கு அமைச்சர்களாக செயல்படுவர் என்றும் அறிவித்திருந்தார். இந்த நிலையில் அமைச்சரவை பதவியேற்று 3 ஆண்டுகள் ஆகும் நிலையில் புதிய அமைச்சரவையை நியமனம் செய்ய முதல்வர் ஜெகன் மோகன் முடிவு செய்தார்.
மேலும் செய்திகளுக்கு..எது தாழ்ந்த சாதி ? சர்ச்சையில் சிக்கிய பெரியார் பல்கலை.. தமிழக அரசு அதிரடி உத்தரவு !
இதுவரை சிறப்பாக பணியாற்றியவர்கள் மற்றும் மூத்த அமைச்சர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதன் பின்னர் புதிதாக யாருக்கு வாய்ப்பு வழங்கலாம் என ஆலோசிக்கப்பட்டது. புதிய அமைச்சர்களில் நகரி தொகுதி எம்எல்ஏவும், நடிகையுமான ஆர் கே ரோஜாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. நடிகை ரோஜா தனது மகன் கௌஷிக்குக்கு சமீபத்தில் பென்ஸ் கார் ஒன்றினை வாங்கி தந்துள்ளார்.
அவர் ஏற்கனவே ஒரு இடத்தில் பேசிய போது, நான் பணக்காரி ஒன்றும் கிடையாது. மக்களோடு மக்களாக வாழ்ந்து வருகிறேன் என்று கூறியுள்ள காணொளியை பரப்பி வருகின்றனர். ஒரு காலத்தில் பயங்கர பிஸியான கதாநாயகியாக இருந்த ரோஜா, பின்னர் ஜபர்தஸ்த் தொலைக்காட்சியில் நடுவராக தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கி நல்ல பணம் சம்பாதித்துள்ளார். அதுமட்டுமில்லாமல், அவர் இரண்டு முறை எம்எல்ஏவாக வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு..மீண்டும் அதிமுகவில் சேர்கிறார் ஓபிஎஸ்? பதறிய எஸ்.பி வேலுமணி.. இதுதான் ஒரே வழி!
அவர் வாங்கி கொடுத்துள்ள காரின் மதிப்பு சுமார் ஒன்றரை கோடி ரூபாய்க்கு மேல் உள்ளதாக கூறப்படுகிறது. தான் ஒரு பணக்காரி இல்லை என்று சொன்ன ரோஜாவுக்கு, எப்படி விலையுயர்ந்த கார் வாங்க பணம் வந்தது என்று கேள்வி எழுப்புகின்றனர். அவர் அமைச்சர் ஆன பின்பு நன்றாக சம்பாதித்து வருகிறார் என்று தகவல்கள் வெளியான நிலையில், நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்து வருகின்றனர். குறிப்பாக எதிர்கட்சியான தெலுங்கு தேசம் கட்சியினர் ரோஜாவை குறிவைத்து ட்ரோல் செய்து வருகிறார்கள்.
மேலும் செய்திகளுக்கு..மெட்ரோ ரயிலில் இளைஞனுக்கு ‘தர்ம அடி’ போட்ட இளம்பெண்..வைரல் வீடியோ - எதற்கு தெரியுமா ?