மீண்டும் அதிமுகவில் சேர்கிறார் ஓபிஎஸ்? பதறிய எஸ்.பி வேலுமணி.. இதுதான் ஒரே வழி!
எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் கட்சி நிர்வாகிகளை மாறிமாறி நீக்கி வருவது அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக பொதுக்குழு கூட்டம், சென்னை, வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் ஜூலை 11ல் நடந்தது. இதற்கு முன்னதாக அதிமுக பொதுக்குழுவிற்கு தடை கேட்டு ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்த வழக்கில், பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அக்கூட்டத்தில் இபிஎஸ் தலைமையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவில் இரட்டை தலைமை பதவியை ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் அதிமுகவில் இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ் நியமிக்கப்பட்டார். அதிமுக கொள்கை, கோட்பாடுகளுக்கு விரோதமாக செயல்பட்டதால், கழக பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் செய்யப்படுவதாக, அதிமுக பொதுக்குழுவில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் செய்திகளுக்கு.. கயல் சீரியலில் வரும் கயல் தான் சின்னம்மா.. மேடையில் கண்ணீர் விட்ட திவாகரன் - சசிகலா !
இது ஓபிஎஸ் தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி, கே.பி முனுசாமி நீக்கப்படுவதாக, ஓபிஎஸ் தலைமை அலுவலகத்தில் வைத்து அறிவித்தார். இந்நிலையில் அதிமுக துணைப் பொதுச் செயலாளர்களாக கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், அதிமுக தலைமை நிலைய செயலாளராக எஸ்.பி. வேலுமணி ஆகியோரை நியமனம் செய்து, கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இருவரும் மாறிமாறி நீக்கி வருவது அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த எஸ்.பி வேலுமணி, ‘ஜெயலலிதாவின் ஆசியுடன் கழக பொதுசெயலாளராக பொது குழு உறுப்பினர்களால், மக்களால் எதிர்பார்த்த கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் தேர்ந்தெடுக்கப்பட்டது தமிழக மக்களுக்கு எழுச்சி மட்டுமல்லாது அனைவரும் கொண்டாடும் நிகழ்வாக அமைந்தது.
மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும் என மக்கள் முடிவு செய்து விட்டார்கள். ஒற்றை தலைமை வேண்டுமென அனைவரும் எதிர்பார்த்த நிகழ்வு நடந்து இருக்கிறது. கடந்த ஒரு ஆண்டு காலமாக கோவையில் எந்தவித பணிகளும் நடைபெறவில்லை. எடப்பாடியார், ஜெயலலிதா ஆகியோர் ஆட்சியில் இருந்த பொழுது கொண்டுவரப்பட்ட திட்டங்கள் அனைத்தும் மீண்டும் வரவேண்டும்.
மேலும் செய்திகளுக்கு.. ஐ.டி ரெய்டில் மாட்டிய 500 கோடி.. சிக்கிய எடப்பாடியின் உறவினர் & வேலுமணியின் நண்பர்.!
மக்களாட்சி வரவேண்டும் என்றால் எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சராக வரவேண்டும் என அனைவரும் முடிவு செய்துள்ளார்கள். தற்பொழுது அதிமுக தலைமை நிலைய செயலாளராக எனக்கு பதவி கொடுத்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எம்ஜிஆர் ஜெயலலிதா ஆகியோர் எதிர்பார்த்த அனைத்து திட்டங்களையும் கொண்டு வந்தவர் எடப்பாடியார். அவர் மீண்டும் அவர் முதலமைச்சராக வருவார்.
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலிலும் சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுக அமோக வெற்றி பெறும். அதிமுக தலைமைக் கழகத்தில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மீண்டும் சேர்ந்தால் ஏற்றுக்கொள்வீர்களா ? என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், அதனை தலைமை கழகம் தான் முடிவு செய்யும் என்று கூறிவிட்டு கிளம்பினார்.
மேலும் செய்திகளுக்கு..எது தாழ்ந்த சாதி ? சர்ச்சையில் சிக்கிய பெரியார் பல்கலை.. தமிழக அரசு அதிரடி உத்தரவு !