மெட்ரோ ரயிலில் இளைஞனுக்கு ‘தர்ம அடி’ போட்ட இளம்பெண்..வைரல் வீடியோ - எதற்கு தெரியுமா ?

டெல்லி மெட்ரோ ரயிலில் இளைஞர் ஒருவரை இளம்பெண் ஒருவர் மாறிமாறி அடித்துக் கொள்ளும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Girl Slaps Boy After Argument in Delhi Metro viral video

டெல்லி மெட்ரோ ரயிலில் நடந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், இளைஞர் ஒருவர் இளம்பெண்ணுடன் பேசி கொண்டிருக்கிறார்கள். சிறிது நேரத்தில் அந்த பேச்சு ஆனது வாய் தகராறாக மாறுகிறது. அதில் அந்த பெண் தான் ஸாரா பிராண்டின் டி ஷர்ட் ஒன்றை 1000 ரூபாய்க்கு வாங்கியதாக கூறுகிறாள். 

Girl Slaps Boy After Argument in Delhi Metro viral video

அந்த இளைஞன் அதற்கு  அந்த டி ஷர்ட் விலை 150 ரூபாய்க்கு மேல் இருக்க வாய்ப்பே இல்லை என்று கூற அவர்கள் இருவருக்கும் தகராறு ஆரம்பிக்கிறது. அந்த இளைஞனால் அந்த விலையை ஒப்பு கொள்ள முடியவில்லை. அந்த பெண் போக்கி அந்த இளைஞனின் கன்னத்தில் ஓங்கி பளார் என்று அடிக்கிறாள். 

மேலும் செய்திகளுக்கு..எது தாழ்ந்த சாதி ? சர்ச்சையில் சிக்கிய பெரியார் பல்கலை.. தமிழக அரசு அதிரடி உத்தரவு !

அந்த இளைஞன் எந்தவொரு எதிர்ப்பும் காட்டாமல், அமைதியாக இருக்கிறார்.’இது பொது இடம்’ என்று அந்த இளைஞன் எச்சரிக்கிறார்.அந்த பெண் மீண்டும் அந்த இளைஞனை சரமாரியாக தாக்க ஆரம்பிக்கிறார். கோபமான அந்த இளைஞன் அந்த பெண்ணை அடிக்கிறார். மீண்டும் அந்த பெண் தாக்க, இருவரும் ரயிலை விட்டு கீழே இறங்குகிறார்கள்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவில் வரும் இளைஞனும், இளம்பெண்ணும் காதலன்,காதலியா ? அல்லது பொழுபோக்குக்காக இந்த வீடியோவை எடுத்து இருக்கிறார்களா ? என்று பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு..மீண்டும் அதிமுகவில் சேர்கிறார் ஓபிஎஸ்? பதறிய எஸ்.பி வேலுமணி.. இதுதான் ஒரே வழி!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios