MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • Wedding Season : 25 நாட்களில் 52 லட்சம் திருமணங்கள்.. தங்கம் முதல் திருமண மண்டபம் வரை களைகட்டும் வியாபாரம்!

Wedding Season : 25 நாட்களில் 52 லட்சம் திருமணங்கள்.. தங்கம் முதல் திருமண மண்டபம் வரை களைகட்டும் வியாபாரம்!

Wedding Season: இந்தியாவில் இன்று முதல் டிசம்பர் 15 வரை 25 நாட்களில் சுமார் 52 லட்சம் திருமணங்கள் நடைபெறும் என CAIT கணித்துள்ளது. இதன் மூலம் ரூ.7.5 லட்சம் கோடி வர்த்தகமும், 1.25 கோடி தற்காலிக வேலைவாய்ப்புகளும் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

4 Min read
Author : Vishnupriya
Published : Nov 21 2026, 02:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
இன்று முதல் திருமண சீசன் தொடக்கம்
Image Credit : Pinterest

இன்று முதல் திருமண சீசன் தொடக்கம்

இந்தியாவில் மீண்டும் திருமணக் கொண்டாட்டங்கள் களைகட்டத் தொடங்கியுள்ளன. இன்று (நவம்பர் 21 ) முதல் டிசம்பர் 15 வரை வெறும் 25 நாட்களில் நாடு முழுவதும் சுமார் 52 லட்சம் திருமணங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் திருமண மண்டபங்கள், தங்க நகைக் கடைகள், ஜவுளி நிறுவனங்கள், கேட்டரிங் நிறுவனங்கள் தொடங்கி அலங்காரத் தொழிலாளர்கள் வரை பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பும் வர்த்தகமும் அதிகரிக்க உள்ளது. இந்தத் திருமணக் காலத்தின் மூலம் சுமார் ரூ.7.5 லட்சம் கோடி அளவுக்கு வர்த்தகம் நடைபெறும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

ஒரே மாதத்தில் இத்தனை லட்சம் திருமணங்களா? தினமும் சராசரியாக 2 லட்சத்திற்கும் அதிகமான திருமணங்கள் நடைபெறுமா? எந்தெந்த துறைகளுக்கு அதிக வருமானம் கிடைக்கும்? திருமணச் செலவுகள் எவ்வளவு இருக்கும்? இந்த ஆண்டு திருமண சீசன் குறித்த முழுமையான விவரங்களைப் பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
29
52 லட்சம் திருமணங்கள் - என்ன பின்னணி?
Image Credit : Pinterest

52 லட்சம் திருமணங்கள் - என்ன பின்னணி?

25 நாட்களில் 52 லட்சம் திருமணங்கள்

அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு (Confederation of All India Traders – CAIT) வெளியிட்டுள்ள மதிப்பீட்டின்படி, 2026ஆம் ஆண்டின் முக்கியமான திருமணக் காலம் இன்று (நவம்பர் 21 )ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 15ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த 25 நாட்களில் நாடு முழுவதும் சுமார் 52 லட்சம் திருமணங்கள் நடைபெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதாவது, நாளொன்றுக்கு 2 லட்சத்துக்கும் அதிகமான திருமணங்கள் நடைபெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

இந்த மதிப்பீட்டை CAIT அமைப்பின் ஆய்வுப் பிரிவான CAIT Research & Trade Development Society தயாரித்துள்ளது. 25 மாநிலங்களில் 300-க்கும் மேற்பட்ட வர்த்தகத் தலைவர்கள் மற்றும் 550-க்கும் மேற்பட்ட வர்த்தகச் சங்கங்களுடன் கலந்தாலோசித்து இந்தக் கணிப்புகள் தயாரிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

39
திருமணங்களால் வர்த்தகம்
Image Credit : Pinterest

திருமணங்களால் வர்த்தகம்

திருமணங்களால் ரூ.7.5 லட்சம் கோடி வர்த்தகம்

CAIT மதிப்பீட்டின்படி, இந்த 25 நாட்களில் நடைபெறும் திருமணங்கள் மூலம், சுமார் ரூ.7.5 லட்சம் கோடி அளவுக்கு பொருட்கள் மற்றும் சேவைகள் சார்ந்த வர்த்தகம் வர்த்தகம் நடைபெற வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

இவற்றில், பொருட்கள் மற்றும் சில்லறை விற்பனை: சுமார் ரூ.4.05 லட்சம் கோடி.

சேவைகள் சார்ந்த வர்த்தகம்: சுமார் ரூ.3.45 லட்சம் கோடி.

அதாவது, மொத்த வர்த்தகத்தில் 54 சதவீதம் பொருட்கள் வாங்குவதன் மூலமும், 46 சதவீதம் திருமணச் சேவைகள் மூலமும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

49
எவ்வளவு வர்த்தகம் ?
Image Credit : Pinterest

எவ்வளவு வர்த்தகம் ?

எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு வர்த்தகம் கிடைக்கும்?

திருமணத்திற்கான ஏற்பாடுகளில் தங்க நகைகள், ஆடைகள், உணவுப் பொருட்கள், திருமண மண்டபங்கள், அலங்காரங்கள் எனப் பல்வேறு செலவுகள் இடம்பெறுகின்றன. இந்த ஆண்டு எந்தெந்த துறைகளுக்கு அதிக வர்த்தகம் கிடைக்கும் என CAIT கணித்துள்ளது.

பொருட்கள் மற்றும் சில்லறை விற்பனை

  • தங்க நகைகள் மற்றும் விலைமதிப்புள்ள உலோகங்கள் - ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் கோடி
  • ஆடைகள் மற்றும் ஜவுளிப் பொருட்கள் - ரூ.90 ஆயிரம் கோடி
  • பரிசுப் பொருட்கள், திருமண அலங்காரப் பொருட்கள் - ரூ.37 ஆயிரத்து 500 கோடி
  • மளிகை மற்றும் உணவுப் பொருட்கள் - ரூ.37 ஆயிரத்து 500 கோடி
  • மின்னணுப் பொருட்கள் - ரூ.30 ஆயிரம் கோடி
  • உலர் பழங்கள் மற்றும் இனிப்புகள் - ரூ.30 ஆயிரம் கோடி
  • மரச்சாமான்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் - ரூ.30 ஆயிரம் கோடி


இதில் தங்க நகைகள் மற்றும் விலைமதிப்புள்ள உலோகங்கள் விற்பனை முதலிடத்தில் உள்ளன.

59
திருமணச் சேவைகள்
Image Credit : Pinterest

திருமணச் சேவைகள்

திருமணச் சேவைகள் மூலம் கிடைக்கும் வர்த்தகம்

  • கேட்டரிங் மற்றும் உணவு வழங்கும் சேவைகள் - ரூ.75 ஆயிரம் கோடி
  • திருமண மண்டபங்கள், ஹோட்டல்கள் - ரூ.60 ஆயிரம் கோடி
  • நிகழ்ச்சி ஏற்பாடு மற்றும் திருமணத் திட்டமிடல் - ரூ.37 ஆயிரத்து 500 கோடி
  • மலர் அலங்காரம் மற்றும் திருமண அலங்காரங்கள் - ரூ.37ஆயிரத்து 500 கோடி
  • போக்குவரத்து மற்றும் பயணச் சேவைகள் - ரூ.30 ஆயிரம் கோடி
  • இசை மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் - ரூ.30 ஆயிரம் கோடி
  • புகைப்படம் மற்றும் வீடியோ சேவைகள் ரூ.22 ஆயிரத்து 500 கோடி
  • அழகு மற்றும் ஒப்பனைச் சேவைகள் - ரூ.22 ஆயிரத்து 500 கோடி


இதன் மூலம் திருமண மண்டப உரிமையாளர்கள் மட்டுமின்றி, சமையல் கலைஞர்கள், பூ வியாபாரிகள், புகைப்படக் கலைஞர்கள், மேக்கப் கலைஞர்கள், மேடை அலங்காரத் தொழிலாளர்கள், இசைக் கலைஞர்கள் எனப் பல தரப்பினரும் பயன்பெறுவார்கள்.

69
தற்காலிக வேலைவாய்ப்பு
Image Credit : Pinterest

தற்காலிக வேலைவாய்ப்பு

1.25 கோடி பேருக்கு தற்காலிக வேலைவாய்ப்பு

இந்தத் திருமண சீசனில் அதிகரிக்கப்போகும் வர்த்தக நடவடிக்கைகள் வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. CAIT கணிப்பின்படி, சுமார் 1.25 கோடி தற்காலிக, பருவகால மற்றும் பகுதி நேர வேலைவாய்ப்புகள் உருவாகலாம்.

குறிப்பாக.

  • திருமண சமையல் மற்றும் கேட்டரிங் பணியாளர்கள்
  • மண்டப அலங்காரம் மற்றும் மேடை அமைப்பாளர்கள்
  • புகைப்படம், வீடியோ எடுக்கும் கலைஞர்கள்
  • மணமக்கள் ஒப்பனை மற்றும் அழகுக்கலை நிபுணர்கள்
  • மலர் அலங்காரத் தொழிலாளர்கள்
  • வாகன ஓட்டுநர்கள் மற்றும் போக்குவரத்துத் துறையினர்
  • நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள்
  • இசை மற்றும் ஒலி அமைப்புத் தொழிலாளர்கள்.


இவர்களுக்கு இந்தத் திருமணக் காலம் கூடுதல் வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்பாக அமையும். இருப்பினும், 1.25 கோடி என்பது எதிர்பார்க்கப்படும் வேலைவாய்ப்பு மதிப்பீடுதான். உறுதிப்படுத்தப்பட்ட வேலை நியமனங்களின் எண்ணிக்கை அல்ல.

79
எங்கு அதிக திருமணங்கள்?
Image Credit : Pinterest

எங்கு அதிக திருமணங்கள்?

டெல்லி முதல் தமிழகம் வரை

CAIT கணிப்பின்படி, டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் (Delhi-NCR) மட்டும் சுமார் 5 லட்சம் திருமணங்கள் நடைபெறலாம். இதன் மூலம் அந்தப் பகுதியில் மட்டும் சுமார் ரூ.2.5 லட்சம் கோடி வர்த்தகம் நடைபெறும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ராஜஸ்தான், குஜராத் போன்ற மாநிலங்களிலும் ஆடம்பரத் திருமணங்கள் மற்றும் சுற்றுலா சார்ந்த திருமண நிகழ்ச்சிகள் மூலம் வர்த்தகம் அதிகரிக்கலாம் எனக் கூறப்படுகிறது

தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட நகரங்களில் திருமண மண்டபங்கள், ஜவுளிக் கடைகள், நகைக் கடைகள் மற்றும் கேட்டரிங் நிறுவனங்கள் இந்தக் காலத்தில் கூடுதல் வாடிக்கையாளர்களைப் பெற வாய்ப்புள்ளது.

89
திருமண வர்த்தகம் எப்படி வளர்ந்துள்ளது?
Image Credit : Pinterest

திருமண வர்த்தகம் எப்படி வளர்ந்துள்ளது?

கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது திருமண வர்த்தகம் எப்படி வளர்ந்துள்ளது?

CAIT வெளியிட்டுள்ள முந்தைய ஆண்டுகளுக்கான மதிப்பீடுகளையும் இந்த ஆண்டின் கணிப்பையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

ஆண்டு - திருமணங்களின் எண்ணிக்கை - மதிப்பிடப்பட்ட வர்த்தகம்

2022 - 32 லட்சம் - ரூ.3.75 லட்சம் கோடி

2023 - 38 லட்சம் - ரூ.4.74 லட்சம் கோடி

2024 - 48 லட்சம் - ரூ.5.90 லட்சம் கோடி

2025 - 46 லட்சம் - ரூ.6.50 லட்சம் கோடி

2026 - 52 லட்சம் - ரூ.7.50 லட்சம் கோடி

இதன்படி, 2022 ஆம் ஆண்டில் ரூ.3.75 லட்சம் கோடியாக இருந்த திருமண வர்த்தகம் 2026 ஆம் ஆண்டில் ரூ.7.5 லட்சம் கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு திருமணங்களின் எண்ணிக்கை 46 லட்சத்திலிருந்து 52 லட்சமாக அதிகரிக்கும் என்றும், வர்த்தகம் ரூ.6.5 லட்சம் கோடியிலிருந்து ரூ.7.5 லட்சம் கோடியாக உயரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

99
ஏன் இவ்வளவு திருமணங்கள்?
Image Credit : Pinterest

ஏன் இவ்வளவு திருமணங்கள்?

நவம்பர் மாதத்தில் ஏன் இவ்வளவு திருமணங்கள்?

இந்தியாவில் திருமணத் தேதிகளைத் தீர்மானிப்பதில் பாரம்பரியமாக பஞ்சாங்கம், திதி, நட்சத்திரம், யோகம், லக்னம் போன்ற ஜோதிடக் கணக்கீடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

நவம்பர் 21ஆம் தேதி தேவ் உத்தானி ஏகாதசி (Dev Uthani Ekadashi) அனுசரிக்கப்படுகிறது. வட இந்தியாவில் இந்த நாள் திருமணங்கள் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் மீண்டும் தொடங்குவதற்கான முக்கியமான நாளாகக் கருதப்படுகிறது.

இந்து சமய நம்பிக்கையின்படி, ஆஷாட ஏகாதசியன்று யோக நித்திரைக்குச் செல்லும் மகாவிஷ்ணு, கார்த்திகை மாத சுக்லபட்ச ஏகாதசியன்று விழித்தெழுவதாகக் கருதப்படுகிறது. இதனால் சதுர்மாஸ காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த திருமணம் உள்ளிட்ட மங்களகரமான நிகழ்ச்சிகள் மீண்டும் தொடங்குவதாக நம்பப்படுகிறது.

About the Author

V
Vishnupriya
கா. விஷ்ணுபிரியா செய்தித் துறையில் 3 வருடம் அனுபவம் கொண்டவர். ETV Bharat இணையத்தளத்தில் பணியாற்றிய இவர் தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் மல்டிமீடியா ஜர்னலிஸ்டாக பணிபுரிகிறார். இவர் அரசியல், சினிமா மற்றும் லைஃப் ஸ்டைல் உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
திருமணம்
திருமண ஒளிப்படவியல் பயிற்சி
கொண்டாட்டம்
 
1st TEST • NZ vs IND 2026
Stumps
NZNZ
368
INDIND
(125.0 ov)486/4
Day 3
Schedule ›
31st T20 • WBBLT20
BH-WBH-W
Sun, 22 Nov, 2026
AS-WAS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
32nd T20 • WBBLT20
MS-WMS-W
Sun, 22 Nov, 2026
MR-WMR-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
30th T20 • WBBLT20
Result
SS-WSS-W
123/6
PS-WPS-W
142/7
Sydney Sixers Women beat Perth Scorchers Women by 4 wickets (D/L) method
Schedule ›
29th T20 • WBBLT20
Result
HH-WHH-W
151/2
ST-WST-W
150/5
Hobart Hurricanes Women beat Sydney Thunder Women by 8 wickets
Schedule ›
28th T20 • WBBLT20
Result
AS-WAS-W
168/5
MR-WMR-W
165/4
Adelaide Strikers Women beat Melbourne Renegades Women by 5 wickets
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
2nd TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
325 & 90/2
SLSL
98 & 316
PAK won by 8 wickets
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
ராஜஸ்தானில் பாஜகவுக்கு பின்னடைவு! உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் பிரம்மாண்ட வெற்றி!
Recommended image2
Driving Without Insurance: ரூ.10,000 அபராதம்! வாகனத்திற்கு இன்சூரன்ஸ் இல்லையா? எங்கு, எப்போது?
Recommended image3
Global Religion Report: 2035-க்குள் உலகின் மிகப்பெரிய மதமாக இஸ்லாம்.. இந்துக்கள், கிறிஸ்தவர்கள் நிலை என்ன?
Related Stories
Recommended image1
Gold Rate Today: நகை பிரியர்களுக்கு ஜாக்பாட்: தொடர்ந்து சரியும் தங்கம் விலை: இன்றைய ரேட் செக் பண்ணுங்க!
Recommended image2
Tiruvannamalai Deepam : திருவண்ணாமலை மகா தீபம் நேரம், உள்ளூர் விடுமுறை, சிறப்புப் பேருந்துகள் - முழு விவரம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved