தேசிய கல்விக் கொள்கையை தமிழகத்திற்குள் நுழைய விடமாட்டோம் என்றும் மாநில கல்விக்கொள்கை உறுப்பினர்கள் விரைவில் நியமனம் செய்யப்படுவர் என்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மிகத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தேசிய கல்விக் கொள்கையை தமிழகத்திற்குள் நுழைய விடமாட்டோம் என்றும் மாநில கல்விக்கொள்கை உறுப்பினர்கள் விரைவில் நியமனம் செய்யப்படுவர் என்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மிகத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.தமிழக பட்ஜெட் மீதான விவாத கூட்டத்தில் எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம், தேசியக் கல்விக் கல்விக் கொள்கை தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பதிலளித்து பேசினார். அப்போது கூறிய அவர், ஒரு போதும் தேசியக் கல்விக் கொள்கையை தமிழகத்திற்குள் நுழைய விடமாட்டோம் என்று மிக உறுதிப்பட தெரிவித்துள்ளார். அதே வேளையில், மாநில கல்விக் கொள்கை உறுப்பினர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்று அறிவித்துள்ளார்.
மேலும் படிக்க: அதிமுக ஆட்சியில் அறிவித்ததையும் நிறைவேற்றுவோம்.!! சொல்லி அடித்த முதல்வர் ஸ்டாலின்..!
ஆரம்பம் முதலே தேசிய கலவிக்கொள்கையை எதிர்த்து வரும் திமுக அரசு, மத்திய அரசின் புதியக் கல்விக் கொள்கை மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்கும் வகையில் இருப்பதுடன் தேவையற்ற விவகாரங்களை மாணவர்கள் மீது திணிக்கும் வகையில் இருக்கிறது என்று தொடர்ந்து தெரிவித்து வருகிறது. மேலும் சமீபத்தில் நடந்த தென்மண்டல் பல்கலை. வேந்தர்களின் கூட்டத்தில் காணொளி வழியாக பங்கேற்று பேசிய முதலமைச்சர், கல்வியை பொது பட்டியல் இருந்து மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்றும் மத்திய அரசு, பாடத்திட்டத்தில் பிற்போக்குதனமான கருத்துகளை திணித்துவருவது கவலையளிப்பதாகவும் பேசினார்.
தமிழ்கத்தில் கல்விக்கு என்று தனியாக மாநில கல்விக்கொள்கை உருவாக்கப்படும் என்றும் மாநிலக் கல்விக் கொள்கை உறுப்பினர் நியமனம் ஏப்ரல் முதல் வாரத்தில் இருக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பாமக சட்டமன்றக் குழுத் தலைவர் ஜி.கே.மணி, "மத்தியப் பல்கலைக்ககழக மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அனுமதிக்கக்கூடாது" என்று தெரிவித்தார். இதற்கு பதிலளித்து பேசிய உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி "எந்தக் காலத்திலும் தமிழகத்தில் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு வைக்கப்படமாட்டாது. நுழைவுத் தேர்வு தமிழகத்தில் எந்த ரூபத்தில் நுழைய முயற்சித்தாலும் அதனை எதிர்ப்போம் என்று அவர் கூறினார்.
மேலும் படிக்க: எந்த ரூபத்தில் வந்தாலும் முதலமைச்சர் எதிர்ப்பார்.. நுழைத்தேர்வுக்கு எப்போதும் நோ தான்.. அமைச்சர் உறுதி..
