அரசியல் விமர்சகர் சுமந்த் சி ராமனுக்கும், தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு அமைச்சரவையில் சமீபத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. 10 அமைச்சர்களின் இலாக்காக்களில் மாற்றங்கள் செய்யப்பட்டன.

இதில் மூத்த அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனின் நிதி அமைச்சர் பொறுப்போடு கூடுதலாக அவருக்கு புள்ளியில் துறை பொறுப்பும் வழங்கப்பட்டது. புள்ளியில் துறையில் பிடிஆர் அனுபவம் பெற்றவர் என்பதால் அவருக்கு அந்த துறை வழங்கப்பட்டது.

இந்த நிலையில் அரசியல் விமர்சகர் சுமந்த் சி ராமன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு சர்ச்சையை கிளப்பியுள்ளது. அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 22-23 நிதியாண்டில் தமிழகத்தின் கடன் ரூ.1 லட்சம் கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 21-22 நிதியாண்டில் வாங்கிய ரூ.87, 000 கோடியை விட ரூ.13, 000 கோடி அதிகம். மாநில அரசின் கடன் மொத்தமாக ரூ.6.5 லட்சம் கோடிக்கு மேல் இருக்கலாம்.

Scroll to load tweet…

இதையும் படிங்க..Chidambaram : ரூ.1,000 வேணுமா.? திமுக மாதிரி நாம கொள்ளையடிக்கணும்.. சர்ச்சையை கிளப்பிய ப.சிதம்பரம்

முந்தைய அரசு எப்படி மாநிலத்தை கடனில் தள்ளியது என்பது பற்றி ஊடகங்கள் விவாதம் செய்தது எனக்கு நினைவிருக்கிறது என்று பதிவிட்டிருந்தார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ட்விட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ‘சிறிய அறிவு ஒரு ஆபத்தான விஷயம் என்பதன் சுருக்கமாக சுமந்த் சி ராமன் இருக்கிறார்.

Scroll to load tweet…

பற்றாக்குறை, கடன், நிதியாண்டு,உண்மை நிலை ஆகியவை குறித்து உளறுவதற்கு முன்பாக அறிந்திருக்க வேண்டிய அடிப்படைகளைக் கண்டறிய அவருக்கு ஒரு நாள் அவகாசம் வழங்குவோம். சுமந்த் சி ராமன் தன்னைத் திருத்திக் கொள்ளாவிட்டால், அவருடைய அறியாமையை வெளிக்கொணர ஒரு பத்திரிகை அறிக்கையை வெளியிடுவேன்’ என்று பதிவிட்டுள்ளார். இது அரசியலில் சலசலப்பை உண்டாக்கியுள்ளது.

இதையும் படிங்க..நியூ இயரில் மாமியாருடன் ஓட்டம் பிடித்த மருமகன்.. போலீசிடம் கதறிய மாமனார்.. பரபரப்பு சம்பவம்