பள்ளிகளில் மானிய விலையில் பால் பொருட்கள் வழங்க நடவடிக்கை சட்டப்பேரவையில் அமைச்சர் நாசர் பதில்!
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆவின் பால் மற்றும் உட்பொருட்கள் மானிய விலையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என சட்டப்பேரவையில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. அண்மையில் மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் தலைவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு, அவை ஒத்திவைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இன்றும், நாளையும் அவையை நடத்த முடிவுசெய்யப்பட்டது.இதன்படி, இந்த கூட்டத்தொடரில் ஆவின் பால் பொருட்கள் குறித்து திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்எஸ் பாலாஜி கேள்வி எழுப்பினார்.
உடுகுறியிடப்படாத கேள்வியான இதற்கு பால்வளத்துறை அமைச்சர் நாசர், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆவின் பால் மற்றும் பால் உட்பொருட்கள் மானிய விலையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.
கேள்வி நேரத்தைத் தொடர்ந்து, சட்டப்பேரவையில், இந்தி திணிப்புக்கு எதிரான தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்து பேசினார். பின்னர், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமியின் அறிக்கையும் தாக்கல் செய்யப்படது.
சாதி பார்க்கும் சசிகலா.? எல்லாத்துக்கும் அதிமுகவின் ‘அந்த’ 4 பேர் காரணம் - புலம்பும் அதிமுகவினர்