Asianet News TamilAsianet News Tamil

எப்படியும் தரமாட்டேன்னு தான் சொல்ல போறீங்க..! இதையாவது கொடுங்க..! காங் உறுப்பினர் பேச்சால் அவையில் சிரிப்பலை

 "எப்படியும் தரமாட்டேன்னு தான் சொல்ல போறீங்க, குறைந்தபட்சம் அதே கல்லூரியில் B.Com இன்னொரு கோர்ஸை சேர்த்தாவது கொடுங்க..." என சட்டமன்ற உறுப்பினர் சந்திரசேகர் நகைச்சுவையாக கேள்வி கேட்க அவையில் இருந்த அத்தனை உறுப்பினர்களும் குலுங்கி சிரித்தனர். 

Minister Duraimurugan has alleged that encroachment of lakes is a kind of disease.
Author
First Published Oct 19, 2022, 2:52 PM IST

தமிழக சட்ட பேரவையில் 3 வது நாள் மற்றும் இறுதி நாள் கூட்டம் இன்று காலை தொடங்கியது. அப்போது இன்றைய வினா விடை நேரத்தின் போது கேள்வி எழுப்பிய பொன்னேரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் சந்திரசேகர் தன் தொகுதியில் ஏற்கனவே ஒரு சட்டமன்ற கலை கல்லூரி இருக்கிறது கூடுதலாக ஒரு மகளிர் கல்லூரியும் கொடுத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கேள்வி எழுப்பிய அவர் நிறுத்தாமல் தொடர்ந்து பேசினார். அப்போது "எப்படியும் தரமாட்டேன்னு தான் சொல்ல போறீங்க... குறைந்தபட்சம் அதே கல்லூரியில் B.Com இன்னொரு கோர்ஸை சேர்த்தாவது கொடுங்க..." என நகைச்சுவையாக கேள்வி கேட்க அவையில் இருந்த அத்தனை உறுப்பினர்களும் குலுங்கி சிரித்தனர். முதலமைச்சரும் தன்னுடைய சிரிப்பை கட்டுப்படுத்த முடியாமல் குனிந்தவாறு சிரித்தார். பின்னர் அவருடைய கோரிக்கை பரிசீலனை செய்யப்படும் என அமைச்சர் பொன்முடி பதிலளித்தார். 

Minister Duraimurugan has alleged that encroachment of lakes is a kind of disease.

இதனை தொடர்ந்து  கேள்வி நேரத்தின் போது பேசிய துணை சபாநாயகர் பிச்சாண்டி தன் தொகுதியில் சிலர் ஏரிகளை சுற்றி வீடு கட்டி இருப்பதாகவும் அதனை தற்போது இடித்தால் அது ஏழை எளிய மக்கள் மிகவும் சிரமப்படுவார்கள்  என் தெரிவித்தார். எனவே ஏரிகளை மக்கள் ஆக்கிரமிக்காமல் இரு்க்க வேலி அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதற்கு பதில் அளித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், 

தூத்துக்குடி துப்பாக்கி சூடு..! கொலை வழக்கு பதிவு செய்து இபிஎஸ்யை கைது செய்ய வேண்டும்..! - எதிர்கட்சிகள்

Minister Duraimurugan has alleged that encroachment of lakes is a kind of disease.

ஏரிகளை தூர் வாருவதற்கு நிதி இல்லாமல் நாங்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம் இதில் ஏரியை சுற்றி வேலி அமைப்பது சாத்தியம் இல்லாத ஒன்று. பொதுச்சொத்துக்களை ஆக்கிரமிப்பது ஒரு வியாதி. அது மக்கள் மத்தியில் வளரக்கூடாது நீர்த்தேக்கங்களிலே வீடு கட்டுவது முறையற்ற செயல் அதனால் அவர்களை நாங்கள் வெளியேற்றுவோம் என்பதில் மாறுபட்ட கருத்து கிடையாது என கோபமாக சொல்லி அமர்ந்தார்.

இதையும் படியுங்கள்

குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்.. எடப்பாடி துரோகம் எல்லோருக்கும் தெரியும். ரவுண்டு கட்டி அடித்த ஸ்டாலின்.

Follow Us:
Download App:
  • android
  • ios