MDMK Vaiko Condemns: “நீங்கள் முதல்வரல்ல ஆளுநரே” மத்திய அரசின் பணியாளர் மட்டும் தான் - வைகோ ஆவேசம்

தமிழ்நாட்டின் வரலாற்றில் ஈவு இரக்கமற்ற, மூர்க்கத்தனமான, தான் தோன்றித்தனமான செயல்களை செய்யும் ஆளுநராக ஆர்.என்.ரவி இருப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
 

mdmk general secretary vaiko condemns governor rn ravi in coimbatore

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், சட்டத்திற்கு விரோதமாக பணப் பரிவர்த்தனை செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு இல்லம், கரூரில் உள்ளது அவரது இல்லம் உள்ளிட்ட 5 இடங்களில் அமலாக்க துறையினர் சோதனை மேற்கொண்டனர். 17மணி நேர சோதனைக்கு பிறகு , அவரை விசாரணைக்காக டெல்லி  அழைத்துச் செல்ல இருந்தனர். அப்போது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால், உடனடியாக சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அமலாக்கத் துறையினர் அனுமதித்தனர்.

அதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜிக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவரது இதய ரத்தக் குழாய்களில் 3 அடைப்புகள் இருப்பதால்  செந்தில் பாலாஜிக்கு உடனடியாக பைபாஸ் சர்ஜரி செய்ய வேண்டும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனை அடுத்து அமலாக்கத்துறை மேற்கொண்ட நடவடிக்கையால் அமைச்சருக்கு பாதிப்பு ஏற்பட்டதாகவும் சட்டவிரோதமாக அவரை அடைத்து வைத்தும் பழி வாங்கும் நோக்கில் கைது செய்யப்பட்டதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். 

நான்காவது திருமணம் செய்ய தடையாக இருந்த மாமியாரை கொலை செய்ய திட்டமிட்ட மருமகள்

இதனை அடுத்து மத்திய அரசின்  பழிவாங்கும் செயலை கண்டித்து கோவையில் கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று மாலை கோவை சிவானந்த காலனியில் திமுக கூட்டணி சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதனை அடுத்து இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ  விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 

அப்பொழுது தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே ஈவு இரக்கமற்ற, மூர்க்கத்தனமான தான்தோற்றிதனமான காரியங்களை செய்கின்ற ஆளுநர் , ஆர்.என்.ரவி ஆட்டம் போட்டு வருகின்றார். முதல்வருக்குதான் யாரை அமைச்சராக்க வேண்டும் என்ற அதிகாரம் இருக்கிறது. அமைச்சர் செந்தில் பாலாஜியின் இலாக்காக்களை  பிரித்து கொடுத்து இருப்பதை ஏற்று கொள்ள முடியாது என ஆளுநர் சொல்லி இருப்பது அதிக பிரசிங்கதனமானது, அயோக்கியதனமானது என காட்டமாக விமர்சித்தார்.

கொடைரோடு ரயில் நிலையத்தில் இனி இந்த ரயில்கள் நின்று செல்லும்; அமைச்சர் எல்.முருகன் தொடங்கி வைத்தார்

தொடர்ந்து பேசுகையில், தமிழ்நாட்டில் இந்த ஆளுநர் இருக்கின்ற வரையில் ஜனநாயகத்தை எப்படி சீர்குலைக்க முடியும், ஆட்சியை எப்படி சீர் குலைக்க வைக்க முடியும் என்று செயல்படுகிறார். பி.ஜே.பியின் ஏஜென்டாக, உளவாளியாக  ஆளுநர்  செயல்படுகின்றார். அவருக்கு இருக்கின்ற அதிகாரத்துக்கு விரோதமாக செயல்பட்டு கொண்டிருக்கிறார். முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டது போல ஆளுநர் செயல்படுகிறார். மக்கள் தேர்வு செய்தது தளபதி ஸ்டாலினை தான். ஆர.என்.ரவியை இல்லை. 

ஆளுநர் ரவி மத்திய அரசின் ஒரு வேலைக்காரர், ஏஜென்ட்.. அவ்வளவு தானே தவிர முதல்வரல்ல. ஒன்றிய அரசு அனைத்து இடங்களிலும் பிஜேபியை கொண்டு வந்து கைப்பற்ற நினைக்கின்றனர். சர்வாதிகாரத்தை நிலைநாட்ட மோடி அரசு முயற்சிக்கிறது. அதில் தோற்றுப் போவார்கள் என காட்டமாக தெரிவித்தார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios