Asianet News TamilAsianet News Tamil

கொடைரோடு ரயில் நிலையத்தில் இனி இந்த ரயில்கள் நின்று செல்லும்; அமைச்சர் எல்.முருகன் தொடங்கி வைத்தார்

கொடைரோடு இரயில் நிலையத்தில் குருவாயூர், கட்சுக்கூடா ஆகிய இரண்டு விரைவு இரயில்கள் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவையை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், திண்டுக்கல் எம்பி.வேலுச்சாமி ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

guruvayur and kacheguda express will halt kodaikanal road railway station
Author
First Published Jun 16, 2023, 9:38 AM IST

திண்டுக்கல் மாவட்டத்தில் பாரம்பரியமிக்க கொடைக்கானல்ரோடு ரயில் நிலையத்தில் கடந்த கொரோனா காலத்திற்கு முன்புவரை பத்துக்கும் மேற்பட்ட ரயில்கள் நின்று சென்றன. கொரோனா தடைகாலத்தில் அனைத்து இரயில்களும் நிறுத்தப்பட்டு மீண்டும் அனைத்து இரயில்களும் இயக்கபட்டாலும் கொடைக்கானல்ரோடு ரயில் நிலையத்தில் எந்த ரயில்களும் நின்று செல்லவில்லை.

அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கையை ஏற்று சென்னையில் இருந்து மதுரை வழியாக குருவாயூர் செல்லும் குருவாயூர் தினசரி விரைவு ரயில் மற்றும் மதுரையில் இருந்து தெலங்கானா மாநிலம் கட்சுக்கூடா செல்லும் கட்சுக்கூடா வாராந்திர விரைவு ரயில் ஆகிய இரண்டு விரைவு ரயில்கள் கொடைரோடு ரயில் நிலையத்தில் நேற்று முதல் நின்று செல்ல  உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மீண்டும் ரயில் சேவை தொடங்கப்பட்டது. 

நான்காவது திருமணம் செய்ய தடையாக இருந்த மாமியாரை கொலை செய்ய திட்டமிட்ட மருமகள்

இதற்கான துவக்க நிகழ்ச்சி கொடைரோடு ரயில் நிலையத்தில் நேற்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேனர் வைப்பது முதல் கொடிகட்டுவது, மேளதாளம் வாசிப்பது வரை பாஜக, திமுக என இரு கட்சியினரும் நேற்று முதலே போட்டிபோடு கொண்டு ஏற்பாடு செய்தனர். 

புதுமண தம்பதிக்கு 2.5 லட்சம் புல்லட் பைக்கை பரிசாக வழங்கி அழகு பார்த்த நண்பர்கள்

பரபரப்பின் உச்சகட்டமாக நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த போது மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேசும்போது திமுகவினர் தளபதி வாழ்க, கலைஞர் வாழ்க என கோசமிட்டனர். அதேபோல திமுக எம்பி வேலுச்சாமி பேசும்போது பாஜகவினர் மோடி வாழ்க, பாரத மாதா கி ஜே என மாறிமாரி கோசமிட்டதால் விழாவில் சலசலப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து நிகழ்ச்சியில் விழாவை கொடியரசைத்து துவக்கி வைத்தபோது வேறு கட்சியினரும் ரயில் நிலையத்தில் அங்கும், இங்கும் ஓடி தங்கள் கட்சிக்கொடிகளை அசைத்து ஆரவாரம் செய்ததும் ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Follow Us:
Download App:
  • android
  • ios