Asianet News TamilAsianet News Tamil

பாஜகவை சவக்குழிக்குள் அனுப்பும் வேலையை அண்ணாமலை செய்கிறார் - பாலகிருஷ்ணன் விமர்சனம்

அரசியலில் முதிர்ச்சியற்ற பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஒவ்வொரு நாளும் அக்கட்சியை சவக்குழிக்குள் அனுப்பும் வேலையை செய்து வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டி உள்ளார்.

marxist communist state secretary balakrishnan criticize bjp state president annamalai in coimbatore vel
Author
First Published Sep 29, 2023, 7:41 PM IST

கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “1992 ம் ஆண்டு நடந்த வாச்சாத்தியில் வழக்கை 30 ஆண்டுகளுக்கு மேலாக நடத்திய பெருமை சிபிஎம் கட்சிக்கும், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்திற்கும் உண்டு. இவ்வழக்கில் அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வனத்துறை, காவல் துறை, வருவாய் துறை அதிகாரிகளுக்கு தண்டனையை உறுதி செய்த உயர் நீதிமன்றத்தின்  தீர்ப்பை முழு மனதோடு வரவேற்கிறோம். 

இந்த தீர்ப்பிற்காக நீண்ட, நெடுங்காலம் காத்திருத்தாலும் வரவேற்பு அளிக்கிறோம். ஏழை பழங்குடி மக்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது என்பதற்கு இந்த தீர்ப்பை அதிகாரிகள் படிப்பினையாக எடுத்துக் கொண்டு செயல்பட வேண்டும். வருகின்ற 2ம் தேதி விடுதலை போராட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியை ஆளுநர் நடத்துகிறார். ஆர்.எஸ்.எஸ். பிரசாரகாரரான ஆளுநர் ஆர்.என்.ரவி, காந்தி ஜெயந்தியன்று மரியாதை செலுத்த எந்த அருகதையும் இல்லை. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் யாத்திரை நடைபயணம் அல்ல. இறுதி யாத்திரை என நான் சொன்னது தான் நடந்து கொண்டுள்ளது. 

தடாகம் பகுதியில் குட்டியுடன் புகுந்த யானை கூட்டம் பொதுமக்களை விரட்டியதால் பரபரப்பு

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

அதிமுக - பாஜக இடையேயான உறவு முறிந்துள்ளது. இனி என்னென்ன முறியும் என தெரியவில்லை. பாஜகவை ஒவ்வொரு நாளும் சவக்குழிக்கு அனுப்பும் வேலையை அண்ணாமலை செய்து வருகிறார். அவர் அரசியல் முதிர்ச்சியற்ற தலைவர் என்பதை காட்டி வருகிறார். கோவை எம்.பி.யால் தான் கோவை வளர்ச்சி இல்லாத நகராக மாறிவிட்டது, அவரால் தொழில் முடங்கியதற்கு காரணம் என்று அண்ணாமலை சொல்லியுள்ளார். கோவை எம்.பி. பி.ஆர்.நடராஜனை மக்கள் ஓட்டு போட்டு தான் தேர்ந்தெடுத்தார்கள். ஒரு தேர்தலில் கூட வெற்றி பெற தகுதியில்லாத அண்ணாமலை அவரை குறை சொல்வது ஏற்புடையது அல்ல. நாடு முழுக்க தொழில்கள் முடங்க பாஜகவின் பொருளாதார கொள்கை தான் காரணம். அண்ணாமலை திமுக அரசு மீது இல்லாதது பொல்லாதது சொல்வதற்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம்.

கோவையில் தள்ளாடி நடந்து வந்த மூதாட்டியிடம் நகைகளை பறித்துக்கொண்டு சிட்டாக பறந்த கொள்ளையன்

டெல்டா மாவட்டங்களில் பந்த்

திமுக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி தொகுதி உடன்பாடு அடிப்படையில் தொகுதிகளை கேட்டு பெற்று போட்டியிடுவோம். அகில இந்திய கட்சியான பாஜக தமிழகத்திற்கு தண்ணீர் தரக்கூடாது என போராட்டம் நடத்துவது நியாயமா? பாஜக அரசியல் ஆதாயத்திற்காக தமிழகத்திற்கு விரோதமாக செய்கிறார்கள். காவிரியில் தண்ணீர் திறந்து விடக்கோரி டெல்டா மாவட்டங்களில் பந்த் நடத்தப்படும். பாஜக பந்திற்கு கர்நாடக அரசு பணிவது ஏற்கக் கூடியது அல்ல.

அதிமுக கூட்டணிக்கு வாய்பே இல்லை

அதிமுக உடனான கூட்டணி முறிவால் பாஜக நிலைகுலைந்துள்ளதால், அண்ணாமலை கூட்டணி குறித்து பேசவில்லை. கூட்டணியில் இருந்து அதிமுக விலக அண்ணாமலை பேச்சு மட்டும் போதுமா? பாஜகவின் கொள்கைகள் பற்றி கவலையில்லையா? அண்ணாமலை பேச்சுக்காக கூட்டணியை முறிப்பது சரியாக இருக்குமா? பாஜகவை வீழ்த்தும் போராட்டத்தில் திமுக உடன் இணைத்துள்ளோம். திமுக அரசின் குறைகளை சுட்டிக்காட்ட நாங்கள் தவறுவதில்லை. திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு செல்ல வாய்ப்பு அறவே இல்லை. இது கனவுலகில் இருந்து கதை எழுதுவது போல உள்ளது.

I.N.D.I.A. கொள்கை கூட்டணி

அதிமுக, பாஜகவோடு சேர்ந்தாலும், தனியாக இருந்தாலும் அதிமுகவை எதிர்ப்போம். பாஜகவுடன் இருந்து பிரிந்ததால் அதிமுக நல்ல கட்சி என சொல்ல மாட்டோம். இந்தியா கூட்டணியில் கொள்கை ரீதியாக இணைந்து இருக்கிறோம். கட்சி கொள்கைக்கு தான் மக்கள் ஓட்டு போட வேண்டும். நேரு முதல் மன்மோகன்சிங் வரை கொள்கைகளை முன்வைத்தே ஓட்டு கேட்டார்கள். ஒரு தனிமனிதருக்கு ஓட்டு கேட்பது நல்லதல்ல. இந்தியா கூட்டணி வெல்ல வேண்டும். தேர்தலுக்கு பிறகும் பிரதமர் வேட்பாளர் பிரச்சினை வராது. 

மீண்டும் கோவை, மதுரையில் போட்டி

தமிழகத்தில் மக்கள் செல்வாக்கு பெற்ற முதல் நிலை கூட்டணி திமுக கூட்டணி தான். கமல்ஹாசன் இந்தியா கூட்டணி வருவதை வேண்டாம் என சொல்லவில்லை. அது நாளை முடிவாகும் என சொல்ல முடியாது. கோவை, மதுரை தொகுதிகளை இந்த தேர்தலிலும் கேட்டு பெற்று போட்டியிடுவோம். இந்தியா கூட்டணி பாஜகவை வீழ்த்த ஒன்றாக இருக்கும். ஒவ்வொரு மாநில நிலைக்கு ஏற்ப கூட்டணி முடிவு செய்யப்படும். என்ஐஏ விசாரணை எல்லை தாண்டி செல்கிறது. சிறுபான்மை மக்களை பழிவாங்கும் வகையில் நூற்றுக்கணக்கான மக்களை சிக்க வைக்க முயற்சி நடக்கிறது. அமலாக்கத் துறை பாஜகவின் இளைஞரணியாக உள்ளது” எனத் தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios