Asianet News TamilAsianet News Tamil

தற்போது இருப்பது அண்ணா திமுக அல்ல, அமித்ஷா திமுக; தமிமுன் அன்சாரி விமர்சனம்

அதிமுக தற்போது அமித்ஷா திமுகவாக உள்ளது. அதிமுக தொண்டர்களே இந்த கூட்டணியை ஏற்றுகொள்ளவில்லை. இது எலியும் தவளையுமான கூட்டணி என மனிதநேய மக்கள் கட்சி பொதுசெயலாளர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.

manithaneya makkal katchi general secretary thamimun ansari slams aiadmk bjp allince in kanyakumari
Author
First Published Aug 8, 2023, 1:00 PM IST

மணிப்பூர் கலவரத்தை கண்டித்து  கன்னியாகுமரி மாவட்டம் களியலில் சிறுபான்மை இயக்கத்தினர்  சார்பாக நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட மனிதநேய மக்கள் கட்சி பொதுசெயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான தமிமுன் அன்சாரி செய்தியாளர்களிடம் கூறுகையில்  மணிப்பூரில் கடந்த சில மாதங்களாக  கலவரம் நடத்துவருகிறது. இதுவரை கலவரம் கட்டுக்கு வந்ததாக தெரியவில்லை.

இதை ஜனநாயக சக்திகள் கண்டித்தும் வருகின்றன. இந்த கலவரத்தை மணிப்பூர் பாஜக அரசும், மத்திய அரசும் விரும்புகிறது என்பதை இவர்களுடைய கையாலாகாத தனம் நாட்டுமக்களுக்கு வெளிச்சம் போட்டுகாட்டியுள்ளது. உலகிலேயே பலம் வாய்ந்த இந்திய ராணுவத்தால் கலவரத்தை கட்டுபடுத்த முடியவில்லை என்பது பாஜக அரசியல் ஆதாயத்திற்காக செய்கிறது என்பது வெட்டவெளிச்சமாகிறது. உக்ரைன், ரஷ்யா விவகாரத்தில் பேச்சுவார்த்தைக்கு செல்லும் பிரதமர் மணிப்பூர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது ஏன்?

சாலையோரம் இடம் பிடிப்பதில் தகராறு; தலையில் கல்லைப்போட்டு கொலை - நீதிமன்றம் அதிரடி

நாடாளுமன்றத்தில் இரண்டு மணிநேரத்தில் விவாதத்தை முடிக்க முயல்வது அவர்களுடைய தந்திரம். இந்த விவகாரத்தில் பிரதமர் பதில் கூற மறுப்பது அவருடைய கோழைதனத்தை காட்டுகிறது. வரும் பாராளுமன்ற தேர்தலுக்காக வலதுசாரி சிந்தனையாளர்கள் நாடுமுழுவதும் கலவரத்தை ஏற்படுத்தி தங்களுக்கு ஆதாயம் பெற முயல்கிறார்கள் என்ற அச்சம் ஏற்படுகிறது. மணிப்பூர் விவகாரத்தில்  அம்மாநில முதல்வர் மீது  சட்டபூர்வமாக வழக்குபதிவு செய்து அவரை கைது  செய்யவேண்டும்.

மணிப்பூர் விவகாரம் சிறிய விஷயமென அதிமுகவின் எடப்பாடி இப்படி பேசுவது தவறு. இது சிறிய விஷயமல்ல. இது உலகளாவிய விஷயம். பெரியார், அண்ணா கோட்பாடுகளுக்கு எதிராக அதிமுக தற்போது சென்று கொண்டிருக்கிறது. ஏற்கனவே அதிமுக, பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்திருந்தது. ஆனால் அதிமுகாவை அடமானம் வைக்கவில்லை. 

திண்டுக்கல்லில் பட்ட பகலில் அடுத்தடுத்து 2 பேர் வெட்டி படுகொலை; காவல் துறை விசாரணை

தற்போது அதிமுக அமித்ஷா திமுகவாக உள்ளது. அதிமுக தொண்டகளே இந்த கூட்டணியை ஏற்றுகொள்ளவில்லை. இந்த கூட்டணி, எலியும் தவளையும் போன்று பொருத்தமில்லாமல் உள்ளது. தமிழகத்தின் நலனை பலிகொடுத்துவிட்டு பாஜகவுடனான அதிமுக கூட்டணி அதிமுகவிற்கு பாதகமாக முடியும். அண்ணாமலை பாதயாத்திரையில் மக்கள் நம்பிகையுடன் மனு கொடுக்கின்றனர். அந்த நம்பிகையை சிதைக்கும் விதமாக உரிய இடத்திற்கு மனுக்கள் செல்லாமல் சாலையோரம் வீசப்படுவது என்பது மக்களின் நம்பிகையை அலட்சியபடுத்துவதாகும். பாதயாத்திரையில் மக்கள் நலன் இல்லை. விளம்பரத்திற்காக மட்டுமே நடத்துகிறார்கள் என கூறினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios