மதுரையில் கொரோனா வைரஸ் கண்காணிப்பு முகாமில் இருந்து தப்பிய இளைஞர் ஒருவரை சிவகங்கையில் உள்ள  அவரது காதலி வீட்டில் போலீசார் பிடித்துள்ளனர்.

துபாயில் இருந்து மும்பை வந்து விமானம் மூலம் கடந்த 21ஆம் தேதி மதுரை வந்த சிவகங்கை மாவட்டம் கீழபூங்குடியைச் சேர்ந்த  இளைஞர் மதுரை சின்ன உடைப்பு கொரோனா கண்காணிப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தார். முகாமில் சிகிச்சையில் இருந்த அவர் இன்று அதிகாலை தப்பி ஓடியதாக அவனியாபுரம் காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

முகாமில் இருந்து தப்போடிய அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில் வெளிநாட்டிலிருந்து வந்த அவரை பார்க்க காதலி ஆவலாக இருந்ததால், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அவரை காண சினிமா பாணியில் முகாமிலிருந்து தப்பியோடியது தெரியவந்தது.

சிவகங்கையில் காதலி வீட்டில் இருந்தவரை சுற்றிவளைத்த தனிப்படையினர் கைது செய்து தற்பொழுது மதுரை கொண்டு வருகின்றனர். காதலி வீடு சிவகங்கை மாவட்ட எல்லையில் வருவதால் அவரை கண்காணிக்க அந்த மாவட்ட சுகாதாரத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தான் மட்டுமின்றி காதலி வீட்டுக்கு சென்றதால் இப்போது அவரையும் கண்காணிக்க செய்து கோர்த்து விட்டுள்ளார் அந்த இளைஞர்.