Asianet News TamilAsianet News Tamil

“கள ஆய்வில் முதலமைச்சர்” புதிய திட்டத்தை தொடங்கிவைக்க ரயிலில் பயணம் செய்யும் மு.க.ஸ்டாலின்..! ஏன் தெரியுமா.?

அரசின் திட்டங்களின் செயல்பாடு தொடர்பாக கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலுர் மாவட்டம் காட்பாடியில் தொடங்கிவைக்கிறார்.
 

M. K. Stalin will launch a new program called Chief Minister in Field Survey today
Author
First Published Feb 1, 2023, 9:09 AM IST

கள ஆய்வில் முதலமைச்சர்

அரசின் திட்டங்கள் தொடர்பாக கள ஆய்வுகளின் முக்கியத்துவத்தை பல்வேறு அரசுத் துறை சார்ந்த ஆய்வுக் கூட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  வலியுறுத்தி வந்துள்ளார்கள். இந்தநிலையில் இதற்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில்,  “கள ஆய்வில் முதலமைச்சர்” என்ற புதிய திட்டத்தினை அறிமுகப்படுத்தி, அதன்படி  தமிழ்நாடு முதலமைச்சர், முக்கிய அமைச்சர்கள், அரசுத் துறை செயலாளர்கள் மற்றும் துறைத் தலைவர்கள் ஆகியோருடன் மாவட்டங்களுக்குச் சென்று நிர்வாகப் பணிகளையும், வளர்ச்சி மற்றும் நலத்திட்டப் பணிகளையும், இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு நாட்களில் வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளவுள்ளார்கள்.

இதே பொழப்பா போச்சு! செத்தவங்க திரும்பி வர மாட்டாங்க என்பதால் அடிச்சுவிடும் சீமான்! கொதிக்கும் செல்வப்பெருந்தகை

M. K. Stalin will launch a new program called Chief Minister in Field Survey today

வேலூரில் திட்டத்தை தொடங்கும் ஸ்டாலின்

இதற்காக இன்று காலை 10:30 மணியளவில் சென்னையிலிருந்து வேலூருக்கு ரயிலில் பயணம் மேற்கொள்ளக்கூடிய தமிழக முதலமைச்சர் காட்பாடியில் இறங்கி ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார்.  வேலூர் மாவட்டம், காட்பாடியில் இன்று (01.02.2023) புதன்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் கள ஆய்வின் போது, குடிநீர் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், வருவாய்த் துறை வழங்கக்கூடிய சேவைகள், ஊரக மேம்பாடு, நகர்ப்புற வளர்ச்சி, சாலை மேம்பாடு, வாழ்வாதாரத்தை உயர்த்துதல், இளைஞர் திறன் மேம்பாடு, பொதுக் கட்டமைப்பு வசதிகள், கல்வி, மருத்துவம், குழந்தைகள் ஊட்டச்சத்து போன்ற முக்கிய துறைசார்ந்த திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் அவற்றின் பயன்கள் பொதுமக்களுக்கு முழுமையாகச் சென்றடைவது குறித்தும் ஆய்வு செய்யவுள்ளார்கள்.

M. K. Stalin will launch a new program called Chief Minister in Field Survey today

விவசாயிகளிடமும் ஆலோசனை

இதனை தொடர்ந்து  அப்பகுதிகளில் உள்ள விவசாய சங்க பிரதிநிதிகள், சுய உதவிக் குழுக்கள் மற்றும் தொழில் அமைப்புகளின் கருத்துக்களையும், கோரிக்கைகளையும் கேட்டறிகிறார். இன்று மாலை, நான்கு மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர்கள், காவல்துறை சரக துணைத்தலைவர், காவல்துறைத் தலைவர் (வடக்கு) ஆகியோருடன் மேற்படி மாவட்டங்களின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து  முதலமைச்சர் அவர்கள் ஆய்வு மேற்கொள்வார்கள். கள ஆய்வில் கிடைக்கப்பெறும் தகவல்களின் அடிப்படையில், திட்டச் செயல்பாடுகள் குறித்து பிப்ரவரி 2ஆம் நாள் நடைபெறும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் பங்குபெறும் ஆய்வுக் கூட்டத்தின் போது மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் முன்னிலையில் இப்பொருண்மைகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

இதையும் படியுங்கள்

நான் வேட்பாளராக ஒப்புக்கொண்டதற்கு இது தான் காரணம்.. ஈவிகேஎஸ் இளங்கோவன் சொன்ன பரபரப்பு தகவல்..!

Follow Us:
Download App:
  • android
  • ios