பேருலகு சமைக்க பெண்ணினமே எழு..! மகளிரை மெச்சிய மு.க.ஸ்டாலின்..!

குடும்பத்தின் சரிபாதியாம் பெண் இனத்துக்கு என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும். பெண்களைப் போற்றுதலில் இல்லை; மதிப்பதில், நடத்துவதில் காட்டுவோம்! "இந்தப் பேருலகு சமைக்க பெண்ணினமே எழு!" என்று, அனைவரும் சேர்ந்து உரக்கச் சொல்வோம்! பெண்ணே வாழ்க!

M.K.Stalin tweets women's day wishes

உலகத்தின் ஆக்கும் சக்தியான பெண்மையை போற்றும் வகையில் இன்று உலக மகளிர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. . சர்வேதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் என வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மகளிர் தின வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.

M.K.Stalin tweets women's day wishes

இதுதொடர்பாக அவரது ட்விட்டர் பதிவில், சமூகத்தில், குடும்பத்தின் சரிபாதியாம் பெண் இனத்துக்கு என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும். பெண்களைப் போற்றுதலில் இல்லை; மதிப்பதில், நடத்துவதில் காட்டுவோம்! "இந்தப் பேருலகு சமைக்க பெண்ணினமே எழு!" என்று, அனைவரும் சேர்ந்து உரக்கச் சொல்வோம்! பெண்ணே வாழ்க! என்று குறிப்பிட்டுள்ளார்.

117 தொகுதிகளில் பெண்கள்..! சட்டமன்ற தேர்தலில் அதிரடி காட்ட தயாராகும் சீமான்..!

 

அதேபோல மக்களவை திமுக எம்.பி, கனிமொழி, தாயாய் மனைவியாய் சகோதரியாய் மகளாய் மட்டுமே பெண்ணைப் பார்க்காமல், பெண் என்பவள் சக மனுஷி, கனவுகள் லட்சியங்களோடு அறிவும் திறனும் பெற்ற சமமானவள் என்று உலகம் உணரட்டும்.  பெண் சிசுக்கொலைகள், குழந்தைகள் மீதான வன்முறை, கல்வி மறுப்பு, உரிமை மறுப்பு, குடும்ப வன்முறை, பாலியல் கொடுமை இவை அனைத்தும் ஒழித்து விடுதலை காண்போம் என்று மகளிர் தின வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios