117 தொகுதிகளில் பெண்கள்..! சட்டமன்ற தேர்தலில் அதிரடி காட்ட தயாராகும் சீமான்..!
பெண்களுக்கு சரிசமம் அளிக்கும் வகையில் அரியணையில் ஏறுவதற்கு முன்பே இந்தியத் தேர்தல் அரசியல் வரலாற்றில் இதுவரை எவரும் செய்திடாத முன்னெடுப்பை நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி செய்து காட்டி 20 தொகுதிகளில் ஆண்களையும், 20 தொகுதிகளில் பெண்களையும் சரிநிகராகக் களமிறக்கியதாக சீமான் தெரிவித்திருக்கிறார்.
இன்று உலக மகளிர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. உலகத்தின் ஆக்கும் சக்தியான பெண்மையை போற்றும் வகையில் இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது. சர்வேதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் என வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பெண் விடுதலை இல்லையேல், மண் விடுதலை இல்லை என குறிப்பிட்டு மகளிர் தின வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.
அதில், பெண்களை நதியாகவும், தெய்வமாகவும் உருவகப்படுத்தி வழிபடும் நாட்டில் பெண்களுக்கு எதிரான தொடர் தாக்குதல்கள் யாவும் ஒவ்வொரு மனிதருக்குமான தலைகுனிவு என்றும் ஆணாதிக்க வன்முறையும், பாலியல் குற்றங்களும் விளிம்புநிலையில் இருக்கும் அடித்தட்டு வர்க்கப்பெண்கள் மீதுதான் அதிகளவில் நிகழ்த்தப்படுகிறது என்றாலும், இவ்வகைத்தாக்குதல்கள் யாவும் ஒட்டுமொத்தப்பெண் சமூகத்தின் மீதே ஏவப்படுபவையே என்பதை எவரும் மறுக்க முடியாது என்று கூறியுள்ளார்.
'பெருமதிப்பிற்குரிய ஐயா பேராசிரியர்'..! அன்பழகன் மறைவால் துயருற்ற சீமான்..!
பெண்களுக்கு சரிசமம் அளிக்கும் வகையில் அரியணையில் ஏறுவதற்கு முன்பே இந்தியத் தேர்தல் அரசியல் வரலாற்றில் இதுவரை எவரும் செய்திடாத முன்னெடுப்பை நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி செய்து காட்டி 20 தொகுதிகளில் ஆண்களையும், 20 தொகுதிகளில் பெண்களையும் சரிநிகராகக் களமிறக்கியதாக சீமான் தெரிவித்திருக்கிறார். மேலும் வரும் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் ஆண்களுக்கு நிகராக 117 பெண்களை வேட்பாளராக நிறுத்தி பெண்ணியத்தை பேசிக் கொண்டிருக்கிற அரசியல் இயக்கங்களுக்கு மத்தியில் அதனைக் களத்தில் நாம் தமிழர் கட்சி செய்து கொண்டிருப்பதாகவும் சீமான் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.