2 கோடி முக்கியம் பிகிலு.. 2024 தேர்தலுக்கு மு.க ஸ்டாலின் போட்ட ஸ்கெட்ச்! அதிமுக - பாஜகவுக்கு புது ஆப்பு
வருகின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு இப்போதே திமுக, அதிமுக போன்ற கட்சிகள் பணியை தொடங்க ஆரம்பித்துவிட்டார்கள்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு, ஒரு கோடி உறுப்பினர்களை ஜூன் 3 ஆம் தேதிக்குள் சேர்ப்பது குறித்து நிர்வாகிகளுடன் திமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைகளை தொடங்கியுள்ளனர்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்த தினம் ஜூன் 3-ம் தேதிவருகிறது. இதை முன்னிட்டு, அடுத்தாண்டு ஜூன் 3 ஆம் தேதி வரை திமுக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், ‘ஏற்கெனவே ஒரு கோடி உறுப்பினர் கொண்ட இந்த இயக்கத்தில் மேலும் ஒரு கோடி உறுப்பினர் களை சேர்க்கும் முயற்சியை ஏப்ரல் 3 ஆம் தேதி தொடங்கி ஜூன் 3 ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.
துண்டறிக்கைகள் மூலமாகவும், திண்ணைப் பிரச்சாரங்கள் மூலமாகவும், முக்கிய இடங்களில் முகாம்கள் அமைப்பது மூலமாகவும், வீடுதோறும் தேடிச் சென்றும் புதிய உறுப்பினர்களை கழகத்தில் இணைத்திடுவோம்’’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, திமுகவில் உள்ள 72 மாவட்டச் செயலாளர்கள், பிற அணிகள், அமைப்புகளின் செயலாளர்கள் என அனைவரும் உறுப்பினர் சேர்க்கைக்கான பணிகளை தொடங்கியுள்ளனர். இதற்காக நிர்வாகிகளுடன் அவர்கள் ஆலோசனை நடத்தி, குழுக்களை அமைத்து இப்பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
இது மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு உறுப்பினர்களை சேர்ப்பதாக திமுக கூறினாலும், அது காரணம் கிடையாது என்று திமுக தலைமைக்கு நெருக்கமானவர்கள் வேறு காரணத்தை கூறுகிறார்கள். அதன்படி, வருகின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு மிகவும் வலிமையாக களமிறங்க வேண்டும். அதற்கு இன்னும் நிறைய உறுப்பினர்களை கட்சியில் சேர்க்க வேண்டும் என்பதே என்று கூறுகிறார்கள் உடன்பிறப்புகள்.
இதையும் படிங்க..அவர பெரிய ஆள் ஆக்காதீங்க.. அண்ணாமலை பற்றி என்கிட்ட கேட்காதீங்க - கடுப்பான இபிஎஸ்
திமுக தலைவர் ஸ்டாலின் இதை அறிவித்த உடனே மற்ற கட்சிகளான அதிமுகவும், பாஜகவும் உறுப்பினர் சேர்க்கையை துரிதப்படுத்தி உள்ளார்கள். இந்த நிலையில், நேற்று முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையில், தொகுதி பார்வையாளர்களின் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே உள்ள நிலையில், உறுப்பினர் சேர்க்கை மற்றும் பூத் கமிட்டி அமைப்பதற்கான தொகுதி பார்வையாளர்களுடன் இன்றைய சந்திப்பில் முக்கிய கருத்துகளைப் பகிர்ந்துகொண்டோம்.
2 கோடி உறுப்பினர் என்ற நம் இலக்கை விரைந்து அடைய அவர்களுக்கு ஊக்கமளித்தேன் என்று அதில் கூறியுள்ளார். வரப்போகிற நாடாளுமன்ற தேர்தல் திமுவுக்கு முக்கியமான தேர்தலாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அதே சமயத்தில் எதிர்கட்சிகளான அதிமுக மற்றும் பாஜகவும் உறுப்பினர் சேர்க்கையில் இறங்கி உள்ளது யாருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை விரைவில் பொறுத்திருந்து பார்க்கலாம்.
இதையும் படிங்க..எனக்கு வேற வழி தெரியல.. பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட அண்ணாமலை - திமுக ஊழல் வீடியோ வெளியான பின்னணி