Asianet News TamilAsianet News Tamil

மதுரைக்கு வரும் முதலமைச்சர் ஸ்டாலின் என்னை சந்திக்க உள்ளாரா..? மு.க அழகிரி கூறிய பரபரப்பு தகவல்

சட்டமன்ற தேர்தலின் போது தாசில்தாரை தாக்கிய வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உள்ளிட்ட 20 பேர் நீதிமன்றத்தில் ஆஜர் ஆன நிலையில், வழக்கு விசாரணை வருகிற 6 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

M K Alagiri appeared in court in the case of assaulting the tahsildar
Author
First Published Feb 22, 2023, 12:26 PM IST

தாசில்தாரை தாக்கிய முக அழகிரி

கடந்த 2011ம் ஆண்டு ஏப்ரல் மாதம், சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது  மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள வெள்ளலூர் அம்பலக்காரன்பட்டி வல்லடிகாரர் கோயிலுக்குள்,  ஓட்டுக்கு வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக புகார் அளிக்கப்பட்டது.  இதனையடுத்து மேலூர் தேர்தல் அதிகாரியும் தாசில்தாருமான காளிமுத்து மற்றும் தேர்தல் அலுவலர்கள், வீடியோ கேமராமேனுடன் அங்கு சென்று வீடியோ எடுத்தனர். இதற்கு மு.கஅழகிரி தரப்பு கடும் எதிர்ப்புத் தெரிவித்து அழகிரியுடன் இருந்தவர்கள் தன்னை அடித்து, உதைத்ததாக தாசில்தார் காளிமுத்து கீழவளவு காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்த போலீஸ்..! அதிரடியாக களத்தில் இறங்கிய திமுக அரசு

M K Alagiri appeared in court in the case of assaulting the tahsildar

நீதிமன்றத்தில் அழகிரி ஆஜர்

இதனையடுத்து மு.க. அழகிரி, மதுரை துணை மேயர் மன்னன் மற்றும் திமுகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளான ரகுபதி, திருஞானம் உள்ளிட்ட 21 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு  செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி டீலாபானு முன்பாக விசாரணைக்கு வந்தபோது முன்னாள் மத்தியஅமைச்சர் மு.க.அழகிரி முன்னாள் துணை மேயர் மன்னன் மற்றும் திமுக நிர்வாகிகளான ரகுபதி, திருஞானம், செந்தில், கருப்பணன், பொன்னம்பலம்,ராமலிங்கம், நீதிதேவன், நாகராஜ், மயில்வாகனன், சேகர், தமிழரசன், சோலை, போஸ், பாலு, ராகவன், பாலகிருஷ்ணன், அய்யனார், வெள்ளையன் உள்ளிட்ட 20பேர் நேரில் ஆஜராகினர்.

M K Alagiri appeared in court in the case of assaulting the tahsildar

ஸ்டாலின் என்னை சந்திக்கிறாரா.?

வழக்கு தொடர்பாக 3 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது இதனையடுத்து வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை மார்ச் - 6 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். அப்போது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரையில் ஆய்வு நிகழ்ச்சிக்கு வரும் பொழுது சந்திக்க வாய்ப்பு உள்ளதா என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த மு.க.அழகிரி  முதலமைச்சர் மதுரைக்கு வருவதே காலையில் தான் தெரிந்துகொண்டேன் என்னை சந்திப்பாரா என்பது எனக்கு தெரியாது என தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

தமிழக மாணவர்கள் மீது தாக்குதல்..! வாய்மூடி வேடிக்கை பார்த்த போலீஸ்.! ஏபிவிபி அமைப்பினர் மீது நடவடிக்கை-கனிமொழி

Follow Us:
Download App:
  • android
  • ios