Asianet News TamilAsianet News Tamil

100 அமைச்சர்கள் கூட வரட்டும்.. மாநில உரிமையில் தலையிட்டால்.. பொறுத்துக் கொள்ள மாட்டோம்.. பொங்கிய ஜெயக்குமார்

தமிழகத்திற்கு 100 மத்திய அமைச்சர்கள் கூட வரட்டும் அவர்களால் தமிழகத்திற்கு நல்லது நடந்தால் வரவேற்போம், ஆனால் மாநில உரிமைகளில் தலையீட்டால் கண்டிப்பாக அதை எதிர்ப்போம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

 

Let even 100 central ministers come to Tamil Nadu but if they interfere with state rights we will oppose it... Ex Minister Jayakumar.
Author
First Published Oct 17, 2022, 3:14 PM IST

தமிழகத்திற்கு 100 மத்திய அமைச்சர்கள் கூட வரட்டும் அவர்களால் தமிழகத்திற்கு நல்லது நடந்தால் வரவேற்போம், ஆனால் மாநில உரிமைகளில் தலையீட்டால் கண்டிப்பாக அதை எதிர்ப்போம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மத்திய அரசின் திட்டங்கள் எப்படி செயல்படுத்தப்படுகிறது என்பது குறித்து ஆய்வு செய்ய 20 நாளில் 50 மத்திய அமைச்சர்கள் தமிழகத்திற்கு வர உள்ளார்கள் என அண்ணாமலை எச்சரித்துள்ள நிலையில் ஜெயக்குமார் இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளார். 

Let even 100 central ministers come to Tamil Nadu but if they interfere with state rights we will oppose it... Ex Minister Jayakumar.

இதையும் படியுங்கள்:  தலித் மக்களுக்கு எதிரான தீண்டாமை கோவில்களில் பள்ளிக் கூடங்களில் தொடர்கிறது.. கொந்தளித்த ஆளுநர் ஆர்.என் ரவி.

தமிழகத்திற்கு அடுத்தடுத்து வருகைதரும் மத்திய அமைச்சர்கள் மத்திய அரசின் திட்டங்கள் எப்படி செயல்படுத்தப்படுகிறது என்பது குறித்து ஆராய்ந்து வருகின்றனர். இது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி,  எத்தனை பேர் வேண்டுமானாலும் வரட்டும் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது, தமிழக அரசின் திட்டங்களை ஆராய்ந்து கொள்ளட்டும் எனக் கூறியிருந்தார். இந்நிலையில் சென்னை  ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில்  செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மத்திய அமைச்சர்கள் வருகை குறித்து விமர்சித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: PM KISAN: பிஎம் கிசான் 12 வது தவணையை விடுவித்தார் பிரதமர் மோடி: விவசாயிகளுக்கு ரூ.16ஆயிரம் கோடி உதவி

இது தொடர்பாக அவர் கூறியதாவது, 2004 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றியை பெறும்,  மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலிதா சொன்னது போல நாற்பதும் நமதே,  நாடும் நமதே அடிப்படையில் வெற்றி பெறுவோம். அதுமட்டுமின்றி எதிர்வரும் 2016 சட்டமன்ற தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் கடிதத்திற்கு சபாநாயகர் மதிப்பளிக்க வேண்டும். எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தான் அதிமுக உள்ளது என்றார்.

Let even 100 central ministers come to Tamil Nadu but if they interfere with state rights we will oppose it... Ex Minister Jayakumar.

தொடர்ந்து பேசிய அவர், மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்பதுதான் எங்களது கோட்பாடு, அதைத்தான் பின்பற்றி வருகிறோம், மாநில அரசின்  உரிமைகளில் மத்திய அரசு தலையீட்டால் அதை அதிமுக கண்டிப்பாக எதிர்க்கும்,  அண்ணாமலை சொல்வதுபோல 100அமைச்சர்கள் கூட தமிழகத்திற்கு வரட்டும் ஆனால் அவர்கள் மாநில அரசின் உரிமையில் தலையிடும் பட்சத்தில்  நிச்சயமாக நாங்கள் அதை எதிர்ப்போம். இவர் அவர் கூறினார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios