இபிஸ்க்கு பக்கத்து சீட் ஓபிஎஸ்..! அதிர்ச்சியில் எடப்பாடி அணி..! சட்டசபை கூட்டத்தை புறக்கணிக்க திட்டம்.?
ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்க்கு அரு அருகே இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளதால் தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரை முழுவதுமாக புறக்கணிக்க அதிமுகவில் உள்ள எடப்பாடி தரப்பு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக அதிகார மோதல்
அதிமுகவில் ஏற்பட்டுள்ள ஒற்ற தலைமை மோதல் காரணமாக ஓபிஎஸ்-இபிஎஸ் என அதிமுக பிளவு பட்டுள்ளது. இதனையடுத்து அதிமுகவில் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவிலிருந்து ஓ பன்னீர் செல்வத்தை நீக்கினார். அதேபோல எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியிலிருந்து நீக்கி சபாநாயகருக்கு கடிதம் கொடுத்தார். ஆனால் இதற்க்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஓபிஸ் தரப்போ கடிதம் ஒன்றை சபாநாயகருக்கு வழங்கியது. அந்த கடிதத்தில் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் தான் தான்என்றும் தன்னை கேட்டு தான் எந்தவித முடிவும் எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். மேலும் சட்ட சபை அலுவல்கள் தொடர்பாக தன்னிடமே ஆலோசிக்க வேண்டும் என கடிதத்தில் தெரிவித்து இருந்தார். இந்தநிலையில் அதிமுகவில் யாருக்கு அதிகாரம் என உயர் நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ்-இபிஎஸ் தரப்பினர் மாறி மாறி வழக்கு தொடர்ந்தனர்.
சட்ட பேரவை கூட்டம்
ஒருமுறை எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாகும், மற்றொரு முறை ஓபிஎஸ்க்கு ஆதரவாகவும் தீர்ப்பு வந்தது. இதையடுத்து மீண்டும் உச்சநீதி மன்றத்தில் வழக்கானது தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையானது தற்போது நடைபெற்று கொண்டு உள்ளது. இந்த நிலையில் தமிழக சட்டப்பேரவவை கூட்டமானது இன்று தொடங்குகிறது. அப்போது தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் அதிமுக சார்பாக நடைபெற உள்ள விவாதங்களில் யார் பங்கேற்பது என்பது குறித்து விவாதிக்க ஆர். பி உதயகுமாருக்கு அனுமதி வழங்க வேண்டுமென சபாநாயகரரிடம் இபிஎஸ் கேட்டுக் கொள்ளப்பட்டு கடிதம் கொடுக்கப்பட்டது. ஆனால் சபாநாயகர் இதுவரை எந்தவித முடிவும் எடுக்கவில்லை எப்பொழுதும் போல் அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி,துணை தலைவர் பன்னீர்செல்வம், கொறடா எஸ்பி வேலுமணி ஆகியோருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
சட்டசபையை புறக்கணிக்க இபிஎஸ் திட்டம்
எனவே இன்றைய சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியதும் முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையாவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து சட்டசபை கூட்டமானது ஒத்தி வைக்கப்பட உள்ளது. மேலும் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்க்கு அரு அருகே இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளதால் தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரை முழுவதுமாக புறக்கணிக்க அதிமுகவில் உள்ள எடப்பாடி தரப்பு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் சட்டசபையில் சபாநாயகர் அறையில் நடைபெறும் அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் அதிமுக சார்பாக ஓ பன்னீர்செல்வத்திற்கு அனுமதியானது வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் அதிமுகவில் முன்பு இருந்த நிலையே நீடிப்பதாக சபாநாயகர் முடிவு எடுப்பார் என எதிர்பாகர்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்
அந்த விஷயத்தை பத்தி பேசவே இல்லை.. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறிய பரபரப்பு தகவல்..!