அண்ணாமலை வாட்ச் தேவையில்லாத ஆணி..! அவர் எதை கட்டினால் தமிழகத்திற்கு என்ன பயன்..? கே.எஸ்.அழகிரி

அண்ணாமலை எந்த வாட்ச் கட்டினால் தமிழகத்திற்கு என்ன பயன்..?அவர் எதை கட்டினால் என்ன.? அதற்க்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.
 

KS Alagiri said that the discussion regarding Annamalai watch is unnecessary

வாட்ச் விவகாரம்-திமுக,பாஜக மோதல்

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கட்டியுள்ள வாட்ச் தொடர்பாக சமூக வலைதளத்தில் விவாதிக்கப்பட்டு வந்தது. இதற்க்கு பதில அளித்த அண்ணாமலை இந்த வாட்ச் ரபேல் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது என்றும் விமானத்தின் உதிரி பாகங்களில் இருந்து தயாரிக்கப்பட்டதாகவும் உலகத்திலேயை வெறும் 500 வாட்ச்கள் மட்டும் இருப்பதாக தெரிவித்திருந்தார். இதனையடுத்து தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டிருந்த டுவிட்டர் பதிவில் ஆடு மட்டுமே எனது சொத்து என கூறிவரும் அண்ணாமலை 5லட்சம் ரூபாய் மதிப்பிலான வாட்ச் வாங்கியது எப்படி என கேள்வி எழுப்பியிருந்தார். மேலும் அந்த வாட்சிற்கான பில்லை வெளியிட வேண்டும் என கேட்டிருந்தார். ஏப்ரல் மாதத்தில் பாதை யாத்திரை செல்ல இருப்பதாகவும் அப்போது தனது சொத்து விவரங்கள் முழுவதையும் வெளியிட இருப்பதாக அண்ணாமலை கூறியிருந்தார்.

தமிழகத்தில் நடப்பது ஆட்சியா.? காட்டாச்சியா.? முடிவு கட்ட காத்திருக்கு மக்கள்- இறங்கி அடிக்கும் இபிஎஸ்

KS Alagiri said that the discussion regarding Annamalai watch is unnecessary

அண்ணாமலை ஏன் மறைக்கிறார்

ரபேல் வாட்ச் தொடர்பான விவாதமானது திமுக- பாஜகவினர் இடையே சமூகவலை தளத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனிடையே தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி செய்தியாளர்களிடம் பேசும் போது, அண்ணாமலை எந்த வாட்ச் கட்டினால் தமிழகத்திற்கு என்ன பயன்..?அவர் எதை கட்டினார் என்ன.? அதற்க்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்  அவரும் உண்மையை சொல்லிவிட்டு போகட்டும். அவர் ஏன் மறைக்கிறார் என தெரியவில்லை. ரபேல் நிறுவனம் கொடுத்தாங்கனா ஆமா கொடுத்தாங்க வாங்கிட்டேன் என சொல்ல வேண்டியது தானே, இது ஒரு பெரிய விவாதப்பொருளா ஆக்குவது சரியா படவில்லை என தெரிவித்தார்.

Rafael Watch Annamalai:அண்ணாமலை கட்டிய ரபேல் வாட்ச்; ரபேல் விமான பாகத்தில் செய்யலையா? உண்மை இதுதான் மக்களே !

KS Alagiri said that the discussion regarding Annamalai watch is unnecessary

அண்ணாமலை பாத யாத்திரை

ராகுல் காந்தி போல் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பாத யாத்திரை செல்வதாக கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர்,  இரண்டும் பொறுந்தாது. அதற்க்கு எப்படி இது சமமாகும் என கேள்வி எழுப்பினார் மேலும் பாஜகவினர் நடந்தாலும் பயன் தராது. அமர்ந்து இருந்தாலும் பயன் தராது நின்றாலும் பயன் தாரது என கேஎஸ் அழகிரி கூறினார்.

இதையும் படியுங்கள்

நாம் தமிழர் கட்சி மாநில நிர்வாகியை தட்டி தூக்கிய இபிஎஸ்..! அதிர்ச்சியில் சீமான்
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios