நாம் தமிழர் கட்சி மாநில நிர்வாகியை தட்டி தூக்கிய இபிஎஸ்..! அதிர்ச்சியில் சீமான்
நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கைபரப்புச் செயலாளர் பேராவூரணி திலிபன், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
அதிமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு அதிமுகவில் உள்ள நிர்வாகிகள் பாஜக, திமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு தாவி வருகின்றனர். குறிப்பாக ஆளுங்கட்சியான திமுகவிற்கு கூண்டோடு தாவி வருகின்றனர். இந்தநிலையில் காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் ஆகிய தொகுதிகளில் உள்ள திமுக., பா.ம.க., தேமுதிக, நாம் தமிழர், அமமுக, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சென்னையில் நேரில் சந்தித்து, தங்களை அதிமுகவில் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக்கொண்டனர்.
அதிமுகவில் நாம் தமிழர் மாநில நிர்வாகி
மேலும் தேமுதிக-வைச் சேர்ந்த, வட சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டம், ஆர்.கே. நகர் பகுதி, 41-ஆவது வட்டக் கழகச் செயலாளர் திரு. எஸ். லோகேஷ், பகுதி மகளிர் அணிச் செயவாளர் திருமதி ரஞ்சனி லோகேஷ் ஆகியோர் தலைமையில், 41ஆவது வட்டக் கழக நிர்வாகிகன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் நேரில் சந்தித்து. தங்களைக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக்கொண்டனர். இதனை தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கைபரப்புச் செயலாளர் பேராவூரணி திலிபனும் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து அதிமுகவில் அடிப்படை உறுப்பினராக இணைத்துக்கொண்டார். அப்போது, கழக அமைப்புச் செயலாளரும், புதுக்கோட்டை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டாக்டர் C.விஜயபாஸ்கர் உடன் இருந்தார்.
தலைவா! அதிமுக சிதறி கிடக்கிறது; நாங்கள் பதறி துடிக்கிறோம்.. வைரலாகும் அன்வர் ராஜா போஸ்டர்..!
வாழ்த்து தெரிவித்த இபிஎஸ்
மேலும் நாம் தமிழர் கட்சியின் அக்கட்சியின் ஒன்றியத் தலைவர் வி. திலகர், ஒன்றிய உழவர் பாசறைத் தலைவர் துரை. பார்த்திபன், மாணவர் பாசறை செயலாளர் எஸ். சுதன் மற்றும் தாம்பரம் ஜி. அருண் ஆகியோர் நேரில் சந்தித்து, தங்களைக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக்கொண்டனர். அப்போது அவர்களிடம் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்து கட்சிக்காக தீவிரமாக பணியாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதையும் படியுங்கள்