மோடிஜியின் திட்டங்கள் சாதனைகளைப் புறக்கணித்து ஒரு கர்நாடகா சிங்கம் ஹீரோ போல வார் ரூமில் அட்டூழியங்கள் என்று காயத்ரி ரகுராம் சாடியுள்ளார்.
மோடிஜியின் திட்டங்கள் சாதனைகளைப் புறக்கணித்து ஒரு கர்நாடகா சிங்கம் ஹீரோ போல வார் ரூமில் அட்டூழியங்கள் என்று காயத்ரி ரகுராம் சாடியுள்ளார். முன்னதாக கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும் கட்சியின் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலும் தொடர்ச்சியாகச் செயல்பட்டதால் பாஜகவில் இருந்து காயத்ரி ரகுராம் 6 மாதங்களுக்கு நீக்கப்படுவதாக தமிழக பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கடந்த டிசம்பர் மாதம் அறிவித்திருந்தார்.
இதையும் படிங்க: குடியரசுத் தலைவரிடம் புகார் அளித்த திமுக: நாளை டெல்லி செல்கிறார் ஆளுநர் ரவி
இந்த நிலையில் கட்சியில் இருந்து விலகுவதாக காயத்ரி ரகுராம் அறிவித்தார். இதுக்குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. கட்சித் தலைவரான அண்ணாமலையே கட்சியில் உள்ள பெண்களைப் பற்றி மோசமாகப் பேசுகிறார் என்று குற்றம்சாட்டினார். இதை அடுத்து காயத்ரி ரகுராம் அண்ணாமலைக்கு எதிராக தொடர்ந்து டிவிட்டரில் கருத்துகளை தெரிவித்து வருகிறார்.
இதையும் படிங்க: ஆளுநரை விமர்சிப்பதை நிறுத்திக்கொண்டால் திமுக அரசை காப்பாற்றிக்கொள்ளலாம் - எச்.ராஜா எச்சரிக்கை
அந்த வகையில், தற்போது அவரது டிவிட்டர் பதிவில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிஜேபியின் அரசியல் ஆரோக்கியமான அரசியலாக மோடிஜியின் திட்டங்கள், மோடிஜியின் சாதனைகள் மூலம் வளர்ச்சி என இருந்தது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மோடிஜியின் திட்டங்கள் சாதனைகளைப் புறக்கணித்து ஒரு கர்நாடகா சிங்கம் ஹீரோ போல வார் ரூமில் அட்டூழியங்கள், சுயவிளம்பரம் மட்டுமே இருக்கிறது என்று பதிவுட்டுள்ளார்.
