Asianet News TamilAsianet News Tamil

ஆளுநரை விமர்சிப்பதை நிறுத்திக்கொண்டால் திமுக அரசை காப்பாற்றிக்கொள்ளலாம் - எச்.ராஜா எச்சரிக்கை

ஆளுநர் ஆர்.என்.ரவியை தொடர்ந்து விமர்சிப்பதை நிறுத்திக் கொண்டால் திமுக அரசு கலைக்கப்படுவதில் இருந்து தப்பிக்கலாம் என்று பாஜகவைச் சேர்ந்த ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

BJP person h raja criticise on mk stalin
Author
First Published Jan 12, 2023, 4:49 PM IST

திருச்சியில் பாஜக சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் அக்கட்சியின் முன்னாள் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ஆளுநர் சட்டசபையில் ஆற்றிய உரையில், தமிழகம் அமைதிப் பூங்காவாக இருப்பதாக தெரவித்துள்ளார். இதற்கு ஸ்டாலின், ஆளுநருக்கு நன்றி சொல்லவேண்டும்.

700 ஆண்டுகள் பழமையான காளியம்மன் கோவிலில் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய காவல்துறையினர்

தமிழகத்தில் குண்டுவெடிப்பு, பெட்ரோல் குண்டு வீச்சு, கஞ்சா விற்பனை நடைபெறும் நிலையில், ஆளுநரின் உரைக்கு முதல்வர் நன்றி தெரிவித்திருக்க வேண்டும். தமிழகம் அந்நிய முதலீட்டை அதிகம் ஈர்த்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். ஆனால், கர்நாடகாவும், அதனைத் தொடர்ந்து மகாராஷ்டிராவும் தான் அதிக அளவிலான அந்நிய முதலீடுகளை ஈர்த்துள்ளன. இதுபோன் பொய்யான தகவல்களைத் தான் ஆளுநர் தனது உரையில் தவிர்த்திருக்கிறார்.

Jio 5G in Tamil Nadu: தமிழகத்தில் ஜியோ 5ஜி விரிவாக்கம்!! உங்க ஏரியா இருக்கானு பாருங்க!!

மேலும் ஆளுநருக்கு அனுப்பப்பட்ட உரையில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஆளுநர் ஏற்கனவே தெரிவித்துள்ளார். ஆனால், அவை அச்சகத்திற்கு சென்றுவிட்டன. தாங்கள் விரும்பும் திருத்தங்களை தாங்களே மேற்கொள்ளுமாறு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தான் ஆளுநர் தனது உரையில் மாற்றம் செய்து கொண்டார். 

ஆளுநரை தொடர்ந்து விமர்சிப்பதை திமுக அரசு இத்துடன் நிறுத்திக் கொண்டால், சட்டமன்றம் கலைக்கப்படுவதில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்றார்.

Follow Us:
Download App:
  • android
  • ios