அந்த ஸ்கூல ரெடி பண்ண இன்னும் 2 மாசம் ஆகும்! அதுவரை அங்கு பயின்ற மாணவர்களை இங்கு தான் படிக்க வைக்கனும்!
மாணவி மரண வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்பை பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். கள்ளக்குறிச்சி விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம். மாணவர்கள் தற்கொலையை தடுக்க கவுன்சிலிங் கொடுக்கப்படும்.
குடியரசுத் தேர்தலில் வாக்களித்து விட்டு இன்று கள்ளக்குறிச்சிக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளேன் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவியின் தற்கொலையில் மர்மம் இருப்பதாக கூறி மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், நேற்று போராட்டம் வன்முறையாக வெடித்தது.
இதையும் படிங்க;- அந்த மாணவி செத்து 5 நாளாவது ஒரு அமைச்சர் கூட ஆறுதல் சொல்ல போகல.. திமுக அரசை இறங்கி அடிக்கும் யுவராஜா.!
பள்ளி முன்பு நின்றிருந்த போலீஸ்காரர்களை தள்ளிவிட்டு பள்ளிக்குள் நுழைந்து வளாகத்தில் நிறுத்தியிருந்த பள்ளி பேருந்துகள், கார், டிராக்டர், பொக்லைன் இயந்திரம் உள்ளிட்டவைகளை தீவைத்து எரித்தனர். இதனால், பதற்றம் நிலவியதை அடுத்த 144 தடை உதத்தரவு பிறப்பிக்கப்பட்டு கலவரம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதில், 50க்கும் மேற்பட்ட போலீசார் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையும் படிங்க;- உயிரிழந்த மகனை கட்டித்தழுவி அழுது.. அதே இடத்தில் மாரடைப்பால் துடிதுடித்து இறந்த தாய்.. செங்கல்பட்டில் சோகம்.!
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி இறந்த விவகாரம் தொடர்பாக அப்பள்ளியின் தாளாளர், செயலாளர், முதல்வர் ஆகியோர் ஏற்கனவே கைதான நிலையில் தற்போது வேதியியல் ஆசிரியர் ஹரிப்பிரியா, கணித ஆசிரியர் கிருத்திகா ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். நேற்று நடைபெற்ற வன்முறை தொடர்பாக இதுவரை 390க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், மாணவி மரண வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்பை பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்;- கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணத்தில் தவறு செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் பள்ளியில் ஏற்பட்டுள்ள சேதம் காரணமாக, மீண்டும் அப்பள்ளி இயங்க 2 மாதங்கள் ஆகலாம். அதுவரை அருகில் இருக்கும் அரசுப் பள்ளிகளில் கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவர்களுக்கு பாடமெடுக்கலாமா என்பது குறித்தும் பரிசீலிக்கப்படுகிறது. பெற்றோர் உணர்வை புரிந்து கொண்டு தமிழக அரசு அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளும்.
மாணவி மரண வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்பை பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். கள்ளக்குறிச்சி விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம். மாணவர்கள் தற்கொலையை தடுக்க கவுன்சிலிங் கொடுக்கப்படும். குடியரசுத் தேர்தலில் வாக்களித்து விட்டு இன்று கள்ளக்குறிச்சிக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளேன் என அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க;- கள்ளக்குறிச்சி கலவரம்.. வன்முறையை துண்டியதாக அதிமுக ஐடிவிங் பிரிவைச் சேர்ந்தவர் அதிரடி கைது..!