காலியாகும் டிடிவி தினகரன் அணி..! இளைஞர் அணி செயலாளரை தொடர்ந்து அமைப்புச் செயலாளரை தட்டி தூக்கிய எடப்பாடி

டிடிவி தினகரன் அணியில் இருந்து ஏற்கனவே இளைஞர் அணி செயலாளர் இணைந்த நிலையில் தற்போது முன்னாள் எம்எல்ஏவும் அமைப்பு செயலாளரான கே.கே.சிவசாமி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

Joined AIADMK in the presence of AMMK organizational secretary Edappadi Palaniswami

அதிமுகவில் அதிகார போட்டி

அதிமுகவில் ஏற்பட்ட அதிகார போட்டியால் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம், டிடிவி தினகரன் என பிளவுபட்டுள்ளது. இந்தநிலையில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என உச்சநீதிமன்ற தீர்ப்பு இபிஎஸ் அணிக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக எடப்பாடிக்கு எதிராக ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் இணைய இருப்பதாக செய்திகள் பரவியது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், ஓபிஎஸ்- டிடிவி அணியினர் இணைந்து போராட்டம் நடத்தினர். தேவைப்பட்டால் டிடிவி தினகரனோடு இணைய தயார் எனவும் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருந்தார். இதன் காரணமாக அதிமுக வாக்கானது பிளவு பட வாய்ப்பு இருப்பதாக அரசியல் விமர்சகர்களால் கூறப்பட்டது.

டிடிவி தினகரனோடு கைகோர்த்த ஓபிஎஸ் அணி..! தேனியில் ஒன்றினைந்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு

Joined AIADMK in the presence of AMMK organizational secretary Edappadi Palaniswami

அமமுகவில் இருந்து ஜம்ப் அடிக்கும் நிர்வாகிகள்

இந்தநிலையில் தான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிர்வாகிகளை தங்கள் அணிக்கு எடப்பாடி பழனிசாமி அணியினர் இழுத்து வருகின்றனர்.  அமமுக தலைமை நிலைய செயலாளரும், திருப்பத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கே.கே உமாதேவன் மற்றும் அமமுக செய்தி தொடர்பாளரும், மாநில இளைஞரணி செயலாளராக இருந்த கோமல் ஆர்.கே அன்பரசன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கடந்த வாரம் அதிமுகவில் இணைந்தனர்.

Joined AIADMK in the presence of AMMK organizational secretary Edappadi Palaniswami

காலியாகும் டிடிவி தினகரன் கூடாரம்

இந்தநிலையில் அம்மா முன்னேற்ற கழக அமைப்பு செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான கே.கே.சிவசாமி எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தன்னை அதிமுகவில் இணைத்துக்கொண்டார். டிடிவி தினகரன் அணியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் ஒன்றன் பின் ஒன்றாக எடப்பாடி அணியில் இணைவது டிடிவி மட்டுட=மில்லாமல் ஓபிஎஸ்யையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இதையும் படியுங்கள்

பால் விலையை உயர்த்திய திமுக அரசு.! உற்பத்தியாளர்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்காமல் இருப்பது ஏன்.? அண்ணாமலை

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios