Asianet News TamilAsianet News Tamil

"மயக்க நிலையிலேயே மருத்துவமனை வந்தார் ஜெ...!!!” - இந்திய மெடிக்கல் கவுன்சில் தடாலடி

When admitted to the hospital she was unconscious. He was as good as the treatment given to the Indian Medical Council said
jayalaitha admitted-in-apollo-in-paralysed-mode
Author
First Published Mar 7, 2017, 11:35 AM IST


மருத்துவமனவில் அனுமதிக்கப்பட்ட போது,ஜெயலலிதா மயக்க நிலையில் இருந்தார். அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை நல்ல முறையில் இருந்தது என இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கடந்த டிசம்பர் 5ம் தேதி காலமானார். அவரது மறைவில், சந்தேகம் இருப்பதாக அனைத்து கட்சியினரும் கூறி வருகின்றனர். சமீபத்தில் அதிமுக இரண்டாக உடைந்து ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணி செயல்படுகிறது.

அந்த அணியினரும், ஜெயலலிதா மறைவில் மர்மம் உள்ளது. இதற்கு நீதி விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அப்பல்லோ மருத்துவமனை அதற்கான விளக்கம் அளித்தது.

இதைதொடர்ந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம், நேற்று ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த அறிக்கையை தமிழக அரசிடம் தாக்கல் செய்தது.

இந்நிலையில், இந்திய மருத்துவ கவுன்சில் மாநில தலைவர் ரவிசங்கர் பிரசாத், நிருபர்களிடம் கூறியதாவது:-

உடல் நலக்குறைவால் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவர் மயக்க நிலையில் இருந்தார். அவரது உடல்நிலை மோசமாக இருந்தது.

உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு, எந்த குறையும் இல்லாமல் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு 31 டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். ஒரு மணிநேரத்துக்கு ஒருமுறை அவருக்கு பரிசோதனை செய்து, தீவிரமாக கண்காணித்து கவனித்து வந்தனர்.

ஆனால் பேஸ்புக், வாட்ஸ்அப், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் சிலர் தவறான தகவல்களை பரப்பி மக்களை குழப்பிவிட்டனர். ஒரு நோயாளியை காப்பாற்றுவதே டாக்டர் பணிதான். அதைதான் டாக்டர்கள் செய்தனர். தவறான சிகிச்சை அளிக்க வில்லை.

இவ்வா அவர் கூறினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios