Asianet News TamilAsianet News Tamil

#JaiBhim… என் கதையை திருடிய சூர்யா…! மன்னிப்பு கேளு… வீடியோ ஆதாரம் வெளியிட்ட பிரபல எழுத்தாளர்

எனது கதையை திருடி ஜெய்பீம் என்ற படத்தை நடிகர் சூர்யாவும், இயக்குநர் ஞானவேலும் எடுத்து இருக்கிறார்கள் என்று பிரபல எழுத்தாளர் செஞ்சி தமிழினியன் விவேகானந்தன் ஆதாரத்துடன் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

Jaibhim story stolen
Author
Chennai, First Published Nov 20, 2021, 9:33 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

எனது கதையை திருடி ஜெய்பீம் என்ற படத்தை நடிகர் சூர்யாவும், இயக்குநர் ஞானவேலும் எடுத்து இருக்கிறார்கள் என்று பிரபல எழுத்தாளர் செஞ்சி தமிழினியன் விவேகானந்தன் ஆதாரத்துடன் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

Jaibhim story stolen

இந்த ஜெய்பீம் பிரச்னை எப்போது முடியும் என்று தெரியவில்லை. அலாவுதீன் அற்புத விளக்கு கதையாய் தினசரி ஒரு சர்ச்சைகள் வெளி வந்து கொண்டிருக்கின்றன. படத்தின் தலைப்புக்கும், கதைக்கும் சம்பந்தம் இல்லை, வன்னியர்களை இழிவாக சித்தரித்தது, படத்தில் வரும் சில கதாபாத்திரங்கள் உள்நோக்கத்துடன் வைக்கப்பட்டு என ஒரு புது படம் எடுக்கும் அளவுக்கு விஷயங்கள் சுவாரசியமாக வெளியாகி கொண்டு இருக்கின்றன.

இப்போது… சினிமாவுக்கு உரிய அடையாளத்தில் ஒன்றாக கருதப்படும் கதை திருட்டு என்ற வட்டத்தில் ஜெய்பீம் படம் வந்து விழுந்திருக்கிறது. இது உண்மை கதை, தமிழகத்தில் கம்மாபுரம் கிராமத்தில் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவம் என படத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Jaibhim story stolen

ஆனால்… அந்த கதையே தம்முடையது, தமது அறிவை திருடிய திருடர்கள் என்று பேசும் அளவுக்கு எழுத்தாளர் ஆதாரத்துடன் வீடியோ வெளியிட்டு அதிர வைத்திருக்கிறார்.

அந்த எழுத்தாளர் பெயர் செஞ்சி தமிழினியன் விவேகானந்தன். தாம் எழுதி பெரும் பாராட்டுகளையும், பல்வேறு விருதுகளையும் பெற்ற ஊராகாலி என்ற சிறுகதையை தான் படமாக்கி இருக்கிறார்கள் என்று வெகுண்டு எழுந்து இருக்கிறார்.

இது குறித்து அவர் தமது முகநூல் பக்கத்தில் ஒரு வீடியோ பதிவை ஆதாரத்துடன் வெளியிட்டு உள்ளார். கிட்டத்தட்ட 6 நிமிடங்கள் 40 விநாடிகள் என்ற அளவில் செஞ்சி தமிழினியன் விவேகானந்தன் வெளியிட்டு உள்ள இந்த வீடியோவில் அவர் தமது படைப்பை பற்றி பேசி 3 முக்கிய கருத்துகளை முன் வைத்துள்ளார்.

Jaibhim story stolen

அவர் தமது முகநூல் பதிவில் கூறி இருப்பதாவது: கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் எல்லாம் மூடப்பட்டு இருந்தன. கடந்த 2 மாதங்களாக தான் மீண்டும் திரைப்படங்களை பார்க்கும் வகையில் திரையரங்குகள் திறக்கப்பட்டு உள்ளன.

முன்னணி நடிகர் சூர்யா அவர்கள் தான் நடித்து தயாரித்த ஜெய்பீம் படத்தை தியேட்டர்களுக்கு வழங்காமல் ஒரு கார்ப்ரேட் நிறுவனத்திடம் வழங்கியது கண்டனத்துக்குரியது. அது அவர் உரிமை என்று பேசினாலும், திரையரங்குகளை நம்பி வாழும் குடும்பங்களின் வாழ்வில் மண் அள்ளி போடுவதற்கு சமம்தானே…!

சூர்யா அவர்களே.. நீங்கள் ஒரு சிறந்த திரைக்கலைஞர். யார் சார்பாகவும் நிற்க வேண்டிய அவசியம் இல்லை. யாரையும் உயர்த்தி, தாழ்த்தி வன்ம குறியீடாக வைத்து படம் எடுக்க வேண்டிய அவசியம் என்ன? வன்மங்களினால் விடுதலை கிடைத்து விடாது.

நான் 2019ம் ஆண்டு விதைநெல் பதிப்பகம் மூலம் ஊராகாலி என்ற பெயரில் சிறுகதை தொகுப்பை வெளியிட்டேன். இந்த நூல் திருப்பூர் இலக்கிய விருது 2019, சௌமா இலக்கிய விருது 2019, தமிழ் படைப்பாளி பேரியக்க விருது ஆகிய 3 விருதுகளை பெற்றது.

Jaibhim story stolen

16 சிறுகதைகள் அடங்கிய இந்த தொகுப்பில், 3 சிறுகதைகள் பழங்குடி, இருளர் சமூகத்தின் வாழ்வியலை ஒட்டி எழுதப்பட்ட புனைவு ஆகும். அதில் எழுதப்பட்ட வாழ்க்கை சூழல் காட்சிகளை காட்சி மாறாமல் படமாக்கி இருப்பதை பார்த்ததும் மகிழ்ச்சி அடைந்தேன்.

ஒரு சிறந்த கலைப்படைப்பை எளிய மக்களின் இன்னல்களை பொது சமூகத்துக்கு முன் வைப்பதில் ஒரு படைப்பாளியாக உங்கள் செயலை நான் உச்சி முகர்கிறேன். ஆனால் ஓர் எழுத்தை, படைப்பை உங்கள் திரைப்படத்தில் கொண்டு வரும் போது அந்த படைப்பாளிகளுக்கு தெரியப்படுத்த வேண்டுமா? இல்லையா?

திருடி படைப்பில் படைப்பாளியின் சொந்த ஊரான செஞ்சி அருகே உள்ள பென்னகர் கிராமத்தை காட்ட வேண்டிய அவசியம் என்ன? அதிகாரத்தின் பக்கத்தில் இருக்கிறோம் என்ற திமிரா? நீங்களும், இயக்குநர் ஞானவேல் அவர்களும் சேர்ந்து செய்திருக்கிற அறிவு திருட்டை வன்மையாக கண்டிக்கிறேன்.

இதற்கு படைப்பாளியின் முன் வருத்தத்தையும், மன்னிப்பையும் நீங்கள் கேட்கவேண்டும். எளிய மக்களின் வாழ்வு மேம்பட வேண்டும் என்பதில் திரைக்கலைஞர்களை விட எழுத்தாளரின் பங்கு அதிக மேன்மையானது. முக்கியத்துவம் மிக்கது.

Jaibhim story stolen

திரைப்படம் முழுக்க நீங்கள் அள்ளி தெளித்து இருக்கிற வன்ம அரசியல் குறித்து நான் பேசவில்லை. காரணம்… படைப்பாளிகள் மானுட விடுதலையை விரும்புகிறவர்கள்.

நீங்கள் அறத்தோடு நடந்து கொள்ளுங்கள், ஒரு படைப்பை திருடுவது என்பது அறல் இல்லை, ஒரு கலைஞனை, எழுத்தாளனை மனம் நோக வைத்து நீங்கள் பெறும் கோடிகள் எதற்கும் பயன்படாது.

Jaibhim story stolen

உங்களுக்கு மனசாட்சி இருந்தால் எழுதிய படைப்பாளனுக்கு அவருடைய எழுத்துக்கு மரியாதை தாருங்கள். இது அந்த எளிய மக்களின் வாழ்வை எழுத்தில் கொண்டு வந்தவன் என்ற கர்வத்தோடு வைக்கும் கோரிக்கை… நன்றி என்று எழுத்தாளர் செஞ்சி தமிழினியன் விவேகானந்தன் கூறி உள்ளார். ஆனால் இந்த வீடியோவுக்கு நடிகர் சூர்யாவும், இயக்குநர் ஞானவேலும் பதில் சொல்ல வேண்டும் என்பது தான் அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது…!!

 

Follow Us:
Download App:
  • android
  • ios