அர்ஜுன் சம்பத்தை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் நடத்தி வந்த நிலையில், திருமாவளவனை தான் அப்படி பேசியது தவறுதான் என இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் மன்னிப்பு கோரியுள்ளார். 

அர்ஜுன் சம்பத்தை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் நடத்தி வந்த நிலையில், திருமாவளவனை தான் அப்படி பேசியது தவறுதான் என இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் மன்னிப்பு கோரியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் மீது தனக்கு எப்போதும் அன்பு இருக்கிறது என்றும், தான் அப்படி பேசுபவன் அல்ல என்றும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் யூடியூப்புரூட்டஸ் என்ற யூடியூப் சேனலில் மைனர் விஜய் என்ற யூடியூப்பர் தில்லை நடராஜர் குறித்து பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவினர் இந்து இயக்கங்களை சேர்ந்தவர்கள் மைனர் விஜயை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படியுங்கள்: கடலூர் எம்.எல்.ஏ அய்யப்பன் மீண்டும் திமுகவில் இணைப்பு.. ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்து அறிவிப்பு..

அந்த வரிசையில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் யூ2 புரூட்டஸ் விஜயை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. அதில் சிவானடியார்கள் பலர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், மைனர் விஜயை கைது செய்ய வேண்டும் என தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறோம், ஆனால் இதுவரையிலும் தமிழக காவல்துறை விஜயை கைது செய்யவில்லை, திருமாவளவன் போன்றவர்கள் விஜய்க்கு பாதுகாப்பாக இருந்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்: திமுகவின் பி.டீம் ஓபிஎஸ்..! தலைமை அலுவலகம் சென்றவர் கையில என்ன வச்சிருந்தாருனு பாத்தீங்களா.. சீறிய ஜெயக்குமார்

தொடர்ந்து இந்து தெய்வங்கள் அவமரியாதை செய்யப்பட்டு வருகின்றன, போலீஸ் ஏன் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை, திருமாவளவன் இந்து தெய்வங்களை அன்றாடும் அவமரியாதை செய்து கொண்டிருக்கிறார். அவர் அயோக்கியன், காசு வாங்கிக்கொண்டு முஸ்லிம்கள் போடுகிற எச்சில் பிரியாணிக்காக அவர் பேசிக் கொண்டிருக்கிறார், நான் கோபமாக பேசுகிறேன் என்று என்ன வேண்டாம், இப்படி எல்லாம் நான் பேச மாட்டேன், திருமாவளவன் மீது எனக்கு மிகுந்த அன்பு இருக்கிறது. திருமாவளவன் நடராஜர் கோவிலில் விபூதி பூசினார், ஆனால் இப்போது நடிக்கிறார். அறிவில்ல உனக்கு..

பெற்ற தாயை, இந்த மண்ணை, சிவபெருமானை இழிவுபடுத்தி பேசியவர்க்கு பாதுகாப்பு கொடுக்கிறீர்களா? இது நியாயமா என பேசியிருந்தார். அவர் இந்த பேச்சைக் கண்டித்து தமிழகம் முழுதும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். பலரும் அர்ஜுன் சம்பத்தின் தொலைபேசிக்கு அழைப்பு விடுத்து அவருக்கு கண்டனம் தெரிவித்து வந்தனர்.

திடீரென அர்ஜுன் சம்பத் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார். அதற்கான வீடியோ சமூக வளைதளத்தில் வெளியாகியுள்ளது. அவர் பெசியிருப்பதாவது:- தலைவர் தொல் திருமாவளவன் குறித்து நான் தெரிவித்த கருத்துக்கள் சரியான கருத்துக்கள் அல்ல, என் அன்புக்குரிய சகோதரர் திருமாவளவன் குறித்து அவர் அயோக்கியன், அவர் எச்சில் பிரியாணிக்காக என்று நான் ஒரு கோபத்தில் பேசிவிட்டேன்.

இது மாதிரி பேசக்கூடிய ஆள் நானல்ல, விடுதலை சிறுத்தைகள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கடந்த இரண்டு நாட்களாக என்னை தொலைபேசியில் அழைத்து நாகரீகமாக பேசினார்கள், சிலர் வேறுவிதமாக பேசினார்கள். அதில் அவர்களுக்கு உரிமை உள்ளது. சித்தாந்த ரீதியாக நாங்கள் வேறுபட்டு இருந்தாலும், எங்களுக்கு மோடி எப்படியோ, அப்படித்தான் விடுதலை சிறுத்தைகளுக்கு திருமாவளவன்.

திருமாவளவன் குறித்து நான் பேசிய கருத்துக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். வழக்கம் போல நாம் ஜனநாயக ரீதியில் கருத்தை கருத்தால் எதிர் கொள்வோம், அமைப்பாய்த் திரள்வோம் என்ற புத்தகத்தை எனக்கு பரிசாக வழங்கியிருக்கிறார்கள், நான் ஏற்கனவே அவருடைய புத்தகங்களை படித்திருக்கிறேன், இந்த புத்தகத்தையும் நான் படித்திருக்கிறேன். என அவர் கூறியுள்ளார்.