திமுகவின் பி.டீம் ஓபிஎஸ்..! தலைமை அலுவலகம் சென்றவர் கையில என்ன வச்சிருந்தாருனு பாத்தீங்களா.. சீறிய ஜெயக்குமார்
அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து கட்சியின் ஆவணங்கள் மற்றும் பொருட்களை சேதப்படுத்தியது தொடர்பாக ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
ஓபிஎஸ்-இபிஎஸ் நீக்கம்..?
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக ஓபிஎஸ்- இபிஎஸ் என அதிமுக பிளவுபட்டுள்ளது. இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற நேரத்தில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு தனது ஆதரவாளர்களோடு சென்ற ஓபிஎஸ் அலுவலகத்தை கைப்பற்றினார். கட்சி அலுவலகம் உள்ளே செல்ல முற்பட்ட போது கட்சியின் அலுவலக கதவு மூடி இருந்ததால் கதவுகள் உடைத்து உள்ளே சென்றனர். இதனையடுத்து ஓ.பன்னீர் செல்வம் ஜெயலலிதா ஸ்டைலில் பால்கனியில் தொண்டர்களிடம் இரட்டை இலையை காண்பித்தார். இந்த சம்பவம் அதிமுக பொதுக்குழுவில் உள்ளவர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து பொதுக்குழு கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் கொண்டு வந்து ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டனர். இந்த சம்பவத்தையடுத்து ஓபிஎஸ் அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, என்னை கட்சியில் இருந்து நீக்க யாருக்கும் அதிகாரம் இல்லையென்று கூறியவர், எடப்பாடி பழனிசாமி மற்றும் கே.பி.முனுசாமி ஆகியோரை கட்சியில் இருந்து நீக்குவதாக தெரிவித்தார்.
அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கம்..! அதிரடியாக தீர்மானம் கொண்டு வந்த இபிஎஸ் அணி
ஆவணங்கள் கொள்ளை
இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கட்சி ஜனநாயக முறைப்படி இன்று நடைபெற்ற செயற்குழு பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் இன்று காலை அதிமுக தலைமை அலுவலகத்திற்கு செல்வதற்கு முன் அவரது அடியாட்களைக் கொண்டு அதிமுக தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக குற்றம் சாட்டினார். அதிமுக தலைமை கழக அலுவலகத்திற்கு பாதுகாப்பு கேட்டு காவல்துறையில் மனு கொடுத்துள்ள நிலையில் இன்று காலையில் நடைபெற்ற சம்பவத்தில் குண்டர்களால் அதிமுக தொண்டர்கள் தாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். ஓபிஎஸ் கட்சி அலுவலகத்தில் நுழைந்து அங்கு இருந்த ஆவணங்களை கொள்ளையடித்து சேதப்படுத்தியதாகவும் தெரிவித்தார். இது குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.ஓபிஎஸ் தரம் தாழ்ந்த மனிதராக உள்ளதாகவும், அடியாட்களுடன் உள்ளே நுழைந்து ஆவணங்களை கொள்ளையடித்து சென்றுள்ளதாக கூறினார். திமுகவின் கைக்கூலியாகவும், பி டீமாகவும் ஓபிஎஸ் செயல்பட்டுள்ளார் எனவும் ஈனத்தனமான செயலை ஓபிஎஸ் செய்துள்ளார் எனக்கூறினார்.
எடப்பாடி பழனிசாமி ,கேபி முனுசாமி அதிமுகவில் இருந்து நீக்கம்...! அதிரடி அறிவிப்பு வெளியிட்ட ஓபிஎஸ்
உருட்டு கட்டையில் அதிமுக கொடி
அதிமுக அலுவலகம் சென்ற ஓபிஎஸ் உருட்டு கட்டையில் கட்சியின் கொடியை கட்டி தொண்டர்களிடம் காட்டுவதாக தெரிவித்தார். இந்த உருட்டு கட்டை தான் அதிமுகவின் கலாச்சாரமா? என கேள்வி எழுப்பினார். எத்தனை உருட்டு கட்டைகள் இருந்தாலும், எத்தனை ஸ்டாலின் வந்தாலும் அதிமுவை ஆட்டவோ, அசைக்கவும் முடியாது என தெரிவித்தார். திமுகவில் பிளவு ஏற்பட்டு மதிமுக வெளியே வந்த போது, திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தை கைப்பற்ற வைகோ முயற்சித்த போது அதற்கு இடம் கொடுக்காதவர் ஜெயலலிதா என தெரிவித்தவர், ஆனால் இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற சம்பவங்கள் திமுக தூண்டுதலின் பேரில் நடைபெற்றதாகவும் குற்றம் சாட்டினார். ஓபிஎஸ் திமுகவின் பி டீமாக செயல்படுகிறார் எனவும் தொடர்ந்து அவர் திமுகவுக்கு ஆதரவாகவே செயல்பட்டு வந்ததன் காரணமாக கட்சியிலிருந்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் உட்பட நான்கு பேர் பொதுக்குழுவில் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்
அதிமுக அலுவலகத்திற்கு சீல்..! உள்ளே நுழைந்த வருவாய் துறை அதிகாரிகள்..வெளியேறினார் ஓபிஎஸ்