கடலூர் எம்.எல்.ஏ அய்யப்பன் மீண்டும் திமுகவில் இணைப்பு.. ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்து அறிவிப்பு..

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக கூறி கடலூர் சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த நிலையில் மீண்டும் அவர் திமுகவில் இணைந்துள்ளார். 
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக கூறி கடலூர் சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த நிலையில் மீண்டும் அவர் திமுகவில் இணைந்துள்ளார். 
 

Cuddalore MLA Ayyappan joins DMK again

கடலூர் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் அய்யப்பன் மீண்டும் திமுகவில் பணியாற்ற தலைமை கழகம் அனுமதியளித்துள்ளது. முன்னதாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக கூறி ஐயப்பன் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார்.
தற்பொழுது சஸ்பெண்ட் நடவடிக்கை கைவிடப்பட்டு மீண்டும் அவர் திமுகவில் பணியாற்ற அனுமதிக்கப்படுவதாக கட்சித் தலைமை அறிவித்துள்ளது.கடலூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ அய்யப்பன் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாக கழக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க:ஓ.பன்னீர்செல்வத்துக்கு நாங்க உதவி செஞ்சிருப்போம்.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன சீக்ரெட்

தனது செயலுக்கு ஐயப்பன் வருத்தம் தெரிவித்ததால் மீண்டும் கட்சி உறுப்பினராக செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இதுக்குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,” கடலூர்‌ கிழக்கு மாவட்டம்‌, கடலூர்‌ தொகுதி சட்டமன்ற உறுப்பினர்‌ கோ.அய்யப்பன்‌ அவர்கள்‌ தனது செயலுக்கு வருத்தம்‌ தெரிவித்து, மீண்டும்‌ கழகப்‌ பணியாற்ற அனுமதிக்குமாறு கழகத்‌ தலைவர்‌ அவர்களிடம்‌ வைத்த கோரிக்கையினை ஏற்று, அவர்‌ மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்பட்டு, இன்று முதல்‌ கழக உறுப்பினராகச்‌ செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளார்‌ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Cuddalore MLA Ayyappan joins DMK again

மேலும் படிக்க:அடுத்த பிளான் ரெடி.. தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செல்கிறார் கமல்ஹாசன்.! எதற்கு தெரியுமா?

முன்னதாக நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கடலூர் மாநகராட்சி மேயர் பதவிக்கு கட்சி அறிவித்த சுந்தரி ராஜாவிற்கு எதிராக கடலூர் எம்.எல்.ஏ அயப்பன் ஆதரவாளர் கீதா குணசேகரன் வேட்புமனு தாக்கல் செய்தார். ஆனால் மறைமுகத் தேர்தலில் மொத்தமாக பதிவான 32 வாக்குகளில் 19 வாக்குகள் பெற்று சுந்தரி ராஜா மேயராக வெற்றி பெற்றார். 12 வாக்குகள் பெற்று கீதா குணசேகரன் தோல்வியை தழுவினார்.

தொடர்ந்து கீதா குணசேகரனின் கணவரும், திமுக மாவட்ட பொருளாளருமான குணசேகரன் தற்கொலைக்கு முயற்சித்து, கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள், உறவினர்கள் மருத்துவமனை முன்பு மறியலில் ஈடுபட்டதால், இந்த விவகாரம் பெரும் விவாத பொருளானது. இதனையடுத்து கடலூர் திமுக எம்.எல்.ஏ அய்யப்பன் யை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதிவிலிருந்து நீக்கி அதிரடி உத்தரவை பிறப்பித்தது. 

மேலும் படிக்க:திமுகவின் பி.டீம் ஓபிஎஸ்..! தலைமை அலுவலகம் சென்றவர் கையில என்ன வச்சிருந்தாருனு பாத்தீங்களா.. சீறிய ஜெயக்குமார்
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios